Ads 468x150px

Labels

Tuesday, December 26, 2017

சங்க முஹல்லாவாசிகள் அனைவரின் கனிவான கவனத்திற்கு...

சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் அனைவரின் கனிவான கவனத்திற்கு...

பணி சூழல் காரணமாக பல நாடுகளிலும், பல ஊர்களிலும் பிரிந்துகிடக்கும் நமது சம்சுல் இஸ்லாம் சங்க உறவுகள், ஆண்டு தோறும் விடுமுறையை ஒட்டியும், தொடர்ந்து நடைபெறும் சொந்தங்கள், நண்பர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காகவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிரையில் ஒன்றாக சங்கமிப்பது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் முஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு வரும் 28 டிசம்பர் 2017 என்று காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தருணத்தை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நண்பர்கள் ஊர் நலன், சமுதாய நலன், முஹல்லா நலன் சார்ந்த தங்கள் ஆலோசனைகளை உள்ளூரில் களத்தில் பணியாற்றும் நிர்வாகிகளிடம் முன் வைக்கலாம்.

சங்கமிப்போம்! சக்தி பெறுவோம்!

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்,
அதிராம்பட்டினம்

Sent from my iPhone

ஜனாசா குளிப்பாட்டுதல் பயிற்சி வகுப்பு

26 டிசம்பர் இன்று காலை 11:15 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்க நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் அப்துல் ஹாதி மௌலானா, இப்ராஹீம் மௌலானா, அப்துல் மஜீது ஆகியோர் கலந்துகொண்டு ஜனாசா குளிப்பாட்டுவதற்கான ஒழுங்குமுறைகளை கற்பித்தனர். இதில் சுமார் 70 பேர் வரை கலந்துகொண்டு ஜனாசா குளிப்பாட்டுவதற்கான நெறிமுறைகளை கற்றுக்கொண்டனர்.

Thanks to Adirai Pirai


Sent from my iPhone

Sunday, December 24, 2017

அதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் தொகை வசூலிப்பு ~ நிறுவன உரிமையாளர் கவனத்துக்கு எடுத்துச் சென்றது சம்சுல் இஸ்லாம் சங்கம்! (SISYA)



தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் இயங்கும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காஸ் பதிவு செய்த சில நாட்களில் காஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதல் தொகை  வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில்  புகார் எழுந்தது.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க (SISYA) நிர்வாகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அதன் பிரதிநிதிகள், அந்நிறுவன உரிமையாளர் பாலு அவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து நுகர்வோரின் புகாரை தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்சுல் இஸ்லாம் சங்க பிரதிநிதிகள் கூறியது; 
பாலு இன்டேன் காஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. நுகர்வோர் பில் தொகைக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. பில் தொகை மட்டும் வழங்கினால் போதுமானது என காஸ் நிறுவன உரிமையாளர் பாலு கூறியதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர்.


Thanks to Adirai News

Sent from my iPhone

Saturday, December 23, 2017

முக்கிய அறிவிப்பு!!!

அஸ்ஸலாமு அலைக்கும்
 எதிர் வரும்  26/12/2017 செவ்வாய்க்கிழமை அன்று  காலை  11மணி முதல் 12.30வரை  ஜனாசா  குளிப்பாட்டுதல் செயல்முரை  விளக்கம் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடல்  இன்ஷா அல்லாஹ் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது அது சமயம் நமதூர் மார்க் க மேதைகள் விளக்கமளிக்க உள்ளனர் 
அந்த பகுதியுயடைய முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு  அன்புடன் அழைக்கிறது  ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..



Sent from my iPhone

Friday, December 15, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் புகார்!


அதிரை CMP லேன் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை சுத்தம் செய்யக்கோரி முறையாக வடிகால் அமைத்துதர வேண்டி. அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக பேரூர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளால் புகார் அளிக்கபட்டது.

இதனை EO ரமேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்துத்தரபடும் என வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு அதோடு கலெக்டர் அலுவலகத்தில் சுஹைப் என்பவரால் அளிக்கபட்டுள்ள மனு நகலையும் பெற்று கொண்டார்.

புகார் மனுவில் உள்ள விஷயங்களை சங்க நிர்வாகிகள் விளக்கி கூறினர்.

Sent from my iPhone

Tuesday, December 12, 2017

சி.எம்.பி லைன் கழிவு நீர் சம்பந்தமாக

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பிற்க்குறிய ஷம்சுல் இஸ்லாம் சங்க ஜமாத்தார்கள் அனைவருக்கும்.

முக்கிய தகவல்.

இன்று 12/12/2017 செவ்வாய் கிழமை காலை 7:15 மணி முதல் 8:00 மணி வரையிலும்.

சி.எம்.பி லைன் கழிவு நீர் சம்பந்தமாக ஜாஃபர் காக்கா அவர்கள் தலைமையில் 18 பேர் கூடி கருத்துக்கள் கேட்க்கப்பட்டது.

அவரவர் கருத்துக்களை நல்ல விதமாக பதிந்தனர்.

முதல் கட்டமாக பேரூராட்சி அதிகாரிகளுக்கும், கலெக்ட்டர்க்கும் மனுக்களை கொடுக்கும் விசயமாக முடிவு எடுக்கப்பட்டது.

இதற்க்கும் சதியான தீர்வு இல்லாத பட்சத்தில் சங்கம் சார்பாக பேரூராட்சி முற்றுகை போராட்டம்,வரி கட்டுவது புறக்கனிக்கலாம் என பேசப்பட்டது.

இப்படிக்கு

SISYA இளைஞர் அமைப்பு.

Tuesday, December 5, 2017

பிலால் நகர் பகுதிக்கு குப்பை கூண்டுகள் வழங்குதல்.

அதிரையின் ஒரு பகுதியான பிலால் நகர் அதிரையில் பெய்த கனமழையால் பிலால் நகர் பகுதியில் அதிகமான அளவில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது இதன் உடன் சரியான முறையில் குப்பை கூண்டுகள் இல்லாததால் கொசுக்கள் அதிகமான அளவில் உருவாகி நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சுகாதார நலன் கருதி அதிகமான இடங்களில் குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டது இதனை அடுத்து இன்று சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக 05.12.2017 இன்று பிலால் நகரில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் மூன்று குப்பை கூண்டுகள் ஒப்படைக்கப்பட்டது.



Sent from my iPhone

Monday, December 4, 2017

துபையில் (SHISWA) பரிசுகள் வழங்கப்பட்ட 10 அதிஷ்டசாலிகள்.





டிசம்பர் - 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களைக் குலுக்கிப் போட்டு 10 அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயங்களும் சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை அன்பளிப்பு (Sponsorship) செய்தவர்களின் விபரம் வருமாறு:

*1) முதல் பரிசு :* ஒரு பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: A.K.பெரோஜுதீன்* (டோக்கன் # 234)*


பரிசளித்தவர்: அதிரை 90.4 FM சார்பாக *சகோ.A.L.முஹைதீன்*


*2) இரண்டாவது பரிசு:* முக்கால் பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: அப்துல் ரஜாக் (டோக்கன் #30)*

பரிசளித்தவர்: Brite-Med Clinic -Diera - Dubai . *டாக்டர். முஹம்மது ஆரிஃப்*


*3) மூன்றாவது பரிசு:* அரை பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: அஹமதா ஜமாலுதீன் (டோக்கன் # 202)*


பரிசளித்தவர் : *சகோ.M.I.சலீம் - துபாய்*


*4) நான்காவது பரிசு:* அரை பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: M.J.அஸ்லம் (டோக்கன் # 203)*


பரிசளித்தவர்: *சகோ.நாசர் - (Majlis) துபாய்*


*5) ஐந்தாவது பரிசு:* கால்பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: M.S தீனுல் ஹக் (டோக்கன் # 138)*


பரிசளித்தவர்: *சகோ. முஹம்மது ஹுசைன் ஆலிம் (Abdullah Hussain Typing Center- Dubai)*


*6) ஆறாவது பரிசு:* கால் பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: சமீம் அஹமது (டோக்கன் # 121)*


பரிசளித்தவர்: *சகோ. முஹம்மது சாலிஹ் - Threeyem Printings - Dubai*


*7) ஏழாவது பரிசு:* கால் பவுன் தங்க நாணயம் 


*வென்றவர்: ஷேக் தம்பி (டோக்கன் # 095)*
 
பரிசளித்தவர்: S.M.S. அஸ்ரப் அலி (U.S.A)

*8) எட்டாவது பரிசு:* கால் பவுன் தங்க நாணயம் 
(Missed Call Competition)

*வென்றவர்: H.ஹனான் ஹில்மியா*
பரிசளித்தவர்: மீராஷாகிப் (ஆஸ்திரேலியா)

*9) விளையாட்டுப் போட்டி பம்பர் பரிசு:* கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர்: *ஸைனா இப்ராஹிம்*

பரிசளித்தவர்: *M.K.இலியாஸ் - அபுதாபி*


*10) மார்க்க கேள்வி-பதில் பரிசு:* கால் பவுன் தங்க நாணயம்


*வென்றவர் : அஹமது தாஸின்*


பரிசளித்தவர்: *F.இப்ராஹிம் ஃபாருக்*


மேற்கண்ட பரிசுகள் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளுக்கு இரண்டு முதல் பரிசுகளை வழங்கியவர் *சகோ.அபுல் கலாம் - பஹ்ரைன்*

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முஹம்மது ஹுசைன் டைப்பிங் சென்டர் சார்பாக டின்னர் செட் ஒன்று வழங்கப்பட்டது. அதை வென்ற *சகோ.N.M.அஹமது சலீம் (டோக்கன் # 79)* மீண்டும் குலுக்கல் பரிசாக அதை வழங்கினார். *வென்றவர்: நஜுமுதீன் (டோக்கன் # 55).*

விளையாட்டுப் போட்டிகளில் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறப்பு பரிசை *சகோ.A.H. நூருல் ஹக்* வழங்கினார்.

Al Raya Mobile Service சார்பாக விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.


இவைகளுடன் நிகழ்ச்சிக்கான அமீரக தேசியக்கொடிகள், தோரணங்கள் மற்றும் சால்வைகளை சகோ.ஜியாவுதீன் -SUPER SONIC FASHION  அன்பளிப்பாக வழங்கினார்.

குழந்தைகளுக்கான பொம்மைகளை (Toys) *சகோ.A.M.தாஜுதீன்பணியாற்றும் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

Sunday, December 3, 2017

துபையில் (SHISWA) ஒன்றுகூடல் சிறப்பு போட்டிகளில் பரிசு பெற்றோர் விவரங்கள் (படங்கள்) UPDATE

பரிசு வென்றோர் விவரங்கள்:
முதுகுப் பந்து ஓட்டம்:
சல்மான் இஸ்மாயில் & ஹாருன் இஸ்மாயில்
சுஹைல் & அப்துல் கரீம்

சாக்கு ஓட்டம்:
முகைதீன் ஆஷிக்
உதுமான் சித்தீக்
சுஹைல் அபுதாலிப்

கூடைப்பந்து ( ஆண்கள்)
ராஜிக்
அகமது இப்ராஹீம்
முகமது இப்ராஹீம்

50 மீட்டர் ஓட்டம்
எப். சலீம்

லெமன் & ஸ்பூன் ( சிறுமிகள்)
மெஹ்னாஸ்
நவ்ராஹ்

சாக்லெட் கலெக்சன்:
ஷாக்கீர் பாசித்
அஜ்கா அப்துல் ரெஜாக்

பிஸ்கட் கவ்வுதல்:
ஷைனா இப்ராஹீம்
ஹாரூன் இஸ்மாயில்

கூடைபந்து (பெண்கள்)
ஆரிஃபா ஆஷிக்
சாதிக்கா மொய்னூதீன்

ஊசி நூல்கோர்த்தல்:
ரமீஜா முகமது
முஹ்ஸினா மீரா சாஹிப்

மிஸ்டு கால்:
எச். ஹநான் ஹில்மியா

ஆப்பிள் தோலுரித்தல்:
கர்மிலா யூசுப்
ஃபைரோஸா நெய்னா

50 மீட்டர் ஓட்டப்பந்தயம் ( நாற்பது வயதுக்கு மேற்பட்டோர்)
அப்துல் ஹமீது

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை குலுக்கிப்போட்டு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை, கால் பவுன் தங்கக் காசுகள் எட்டுபேருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நூறுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் குர்ஆன் கிராஅத்துடன் தொடங்கி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றன.







































send by iPhone


இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)