Ads 468x150px

Labels

Friday, November 29, 2019

மஷுரா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைக்கும்

நவ : 29.19

இன்று மாலை
நமது சங்கத்தில்
நடைபெற்ற மஷுரா
மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

கிராத் : இப்ராஹிம் மௌலானா

அறிமுக உரை : சங்கத்தின் செயலாளர் அவர்கள் அருமையாக இரண்டு விசயங்கள் பற்றி அதன் விபரங்களை தெரிவித்தார்கள்.

அதன் சுருக்கம்.

1, நான்கு மண்டலங்களின் விரிவாக்கம் முன்னேற்றங்கள்
அதன் விபரங்கள்.

2 , நூற்றாண்டு விழா சம்பந்தமாக மக்களுக்கு எப்படி சிறப்பானதாக அமைவது பற்றி பேசப்பட்டது.

முதலில் நான்கு மண்டலங்களை பற்றி விரிவாக
சொல்லப்பட்டது.

நான்கு மண்டலங்க ளின் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள குறைகளை அதன் பொறுப்பாளர்கள் விபரங்கள் சொன்ன விதம் அருமை.

👉 விரைவில் அதிரை பேரூராட்சி S I திரு. அன்பரசன் அவர்களையும் ,

நான்கு மண்டல பொருப்பாளர்களையும் அறிமுகம் செய்து , அவர்களுக்கு அறிமுக லெட்டர் கொடுக்க வேண்டும்.

நமது சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

👉 நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
புதிய கட்டிடத்திற்கு

பெயர் நுற்றாண்டு நிறைவு மண்டபம் என்று வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

👉 நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆலிம்களின் தலைமையில்

ஊர் சார்பில்
கிராத் போட்டி , குர்ஆன் மனன போட்டி, குர்ஆன் பார்த்து ஓதும் போட்டிகள் , இஸ்லாம் சம்பந்த மான கட்டுரை போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

👉 நூற்றாண்டு விழா மலர் வெளியீடு சம்பந்தமாக தனி குழுவும் , மற்றவைகளுக்காக முக்கியமானவர்கள்
தனியாக 20 க்கும் மேற்பட்டவர்கள் தனி குழுவாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

இவர்கள் ஓராண்டு முழுவதும் நடத்துவார்கள்.

நூற்றாண்டு விழாவில் விளையாட்டு சம்பந்தப்பட்டவைகள் எதுவும் நடைபெறாது என்று முடிவு செய்யப்பட்டது.

👉 நான்கு மண்டலத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு I D கார்டு தனியாக கொடுக்கப்படும்.

👉 நான்கு மண்டலத்தில்
தினமும் மஹ்ரிப் முதல் இரவு 9 மணிவரை மாணவர்களுக்கு நான்கு டியூசன் சென்டர் வைத்து நடத்துவது .

👉 நான்கு மண்டலங்களிலும்
நான்கு இஸ்லாமிக் லைப்ரரி வைப்பது
அதில் தமிழ் , ஆங்கிலம் தினசரி நாளிதழ்கள் உள்ளிட்டவை வழங்குவது.

இப்படி அருமையான திட்டங்களை சங்கத்தின் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இன்ஷாஅல்லாஹ்
ஜனவரி 1 ந்தேதி புதிய கட்டிடம் திறக்கப்படும் என்றும் சொன்னார்கள்.

இந்த அமர்வுக்கு தன்னார்வ இளைஞர்கள் , சமூக ஆர்வலர்கள் , பெரியோர்கள் மற்றும் நான்கு ஜோன்களில் உள்ளவர்கள்
என்று 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது .

அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

நிறைவாக துவாவுடன் அமர்வு நிறைவு பெற்றது.

Thursday, November 28, 2019

சங்கத்தின் மாதாந்திர செயற்க்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது சங்கத்தின் மாதாந்திர செயற்க்குழு கூட்டம் விரிவாக்கப்பட்ட கூட்டமாக இன்ஷா அல்லாஹ் நாளை 29-11-19 வெள்ளிக்கிழமை மாலை 4:15 மணிக்கு சங்க வளாகத்தில் நடைபெறும்.
எனவே செயற்குழு உறுப்பினர்கள்,SISYA,SHISWA மற்றும் 4 மண்டல பொறுப்பாளர்கள்,சங்க ஆர்வளர்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுகாறு கேட்டுக்கொள்கிறோம்.
மஷூராவில்:
----------------------
* 4 மண்டல செயல்பாடுகள்.
* 2020 நமது சங்கத்தின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கு எப்படி பயனுள்ளதாக கொண்டாடுவது.
*போட்டிகள்,சொற்பொழழிவு,விவாதம்,பட்டிமன்றம் மற்றும் மத நல்லிணக்கம் போன்ற தலைப்புகளில் உங்கள் கருத்துக்கள்.
* மேலும் நீங்கள் விரும்பும் தலைப்புகள்
எழுத்து வடிவமாக சமர்ப்பிக்கலாம்..

இப்படிக்கு

ஷம்சுல் இஸ்லாம் சங்கம்.

Sent from my iPhone

Monday, November 25, 2019

Shamsul Islam Sangam Zone Map - 2019


அஸ்ஸலாமு அலைக்கும்,

*நமது சங்க செயலாளரின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்ட மண்டலங்களின் எல்லை வரைப்படம் (ZONE MAP)*.

இதன்மூலம் தாங்கள் எந்த மண்டலத்தில் வசிக்கின்றோம் என்பதை உணர்வதோடு, மண்டலங்களிற்கான வாட்ஸப் குழுவில் இணைக்க / இணைத்துக்கொள்ளவும், கோரிக்கைகள் வைக்கும்போது எந்த மண்டலத்திற்குள் வருகின்றது, அதற்கான பொறுப்பாளர்கள் யார் என்று அறிந்து செயல்படவும் இந்த வரைபடம் உதவும்.

Sunday, November 24, 2019

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற மக்தப் பேராசிரியர்கள் உலமாக்கள் கூட்டம்!

நவ : 24.19

அதிராம்பட்டினம் ஜோன் க்கு உட்பட்ட ஊர்களின் மக்தப் பேராசிரியர்கள் உலமாக்களின் கூட்டம்

இன்று காலை 9.30 மணிக்கு மிக சிறப்பான முறையில் துவங்கி

மதியம் 2.15 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது.

முதலில்
கிராத் : பேராசிரியர் மௌலானா அஹ்மது அனஸ் அவர்கள்.

ஒழுக்கங்கள் : அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் சுருக்கமான முறையில் தெரிவித்தார்கள்.

பிள்ளைகளுக்கு எவ்வாறு மார்க்க கல்வியை போதிக்க வேண்டும்.

மக்தப் பள்ளியில் தஜ்வீதுடன் ஓதும் பிள்ளைகளின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் சுருக்கமாக தெரிவித்தார்கள்.

அதற்கு அடுத்து
அதன் நோக்கங்கள் : பற்றி விரிவாக பேசப்பட்டது.

அதற்கு அடுத்து :
நாம் சரியான முறையில்
அல்குர் ஆணை உச்சரிப்புடன் ஓது கின்றோமா என்பதை பல உதாரணங்களை சொல்லி சொல்லப்பட்டது.

நம்முடைய அழகான பெயர்களை கூட நாம் எவ்வாறு கூப்பிடுகின்றோம்
என்பதை அருமையான முறையில் சொல்லி காண்பிக்க பட்டது.

அல்லாஹுடைய கலாமை சரியாக சொல்ல வில்லை என்றால் அதன் அர்த்தங்கள் மாறி விடுவதையும் சொன்ன விதம் அருமை.

அதேபோல்
அல்குர் ஆணை சில வாக்கியங்களை சொல்லி அதற்கு அடுத்து என்ன என்று

வந்து இருந்த உலமாக்களை பார்த்து கேட்டதும்
அதற்கு உடனே உலமாக்களும் அடுத்த அடுத்த வாக்கியங்களை சொன்னது
அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது
மாஷா அல்லாஹ்.

மக்தப் பற்றி விரிவாக பல உலமாக்கள் பேசினார்கள்.

இறுதியில் துவாவுடன் இந்த அமர்வு நிறைவு பெற்றது.

அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

காலை உணவும் ,
மத்திய உணவும்

செக்கடி பள்ளியில்
ஆண்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெண்களுக்கு சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த அமர்வுக்கு 200க்கும் அதிகமானோர் ஆண்களும் , பெண்களும்
கலந்து கொண்டது
குறிப்பிடத்தக்கது.

சங்கத்தில் ஆண்களுக்கு ஒரு பகுதியும் , பெண்களுக்கு ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டது.

அல்லாஹுடைய கலாமை பற்றி சொல்லி கொண்டு இருக்கும் போது

அல்லாஹுடைய ரஹ்மத் அருள் மழை
காலையில் இருந்தே
விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருந்தது கூடுதல் சிறப்பு.

அத்துடன்
சங்கம்CMP புதுமனை இளைஞர்கள் இந்த நிகழ்வுக்கு சிறப்பாக பணி செய்தார்கள்
குறிப்பிடத்தக்கது.

நம்முடைய பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளை மக்தப் மதரஸா வில் சேர்ப்போம்.

இன்ஷா அல்லாஹ்

ஒவ்வொரு வீட்டிலும்
ஹாபில் மற்றும் உலமாக்கள் , ஆலிம்கள் , ஆலிமாக்களை உருவாக்குவோம்.

நமது முஹல்லாவை
மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

உலக கல்வியிலும்
சிறந்து விளக்குவோம்.

நமது ஊரிலும் அதிகமான உலமாக்கள் மற்றும் ஆலிம்களை உருவாக்குவோம்.

நுற்றாண்டு விழா விற்கு முன்பாக

நமது சங்கத்திற்கு முதல் நிகழ்வாக

அல்லாஹுடைய கலாமை பற்றிய அமர்வு.
மறக்க முடியாத இந்த நிகழ்வு.

Monday, November 18, 2019

நான்கு மண்டலங்களாக பிரிக்க பட்ட விவரம்

நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் உட்பட்ட பகுதிகளை நான்கு மண்டலங்களாக பிரிக்க பட்டு உள்ளது.

அவை அனைத்தும்
சங்கம் என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒன்றாய் சங்கமிப்போம்.
இன்ஷாஅல்லாஹ்.

மண்டலன்களின் விபரங்கள்.

👉1, முதல் மண்டலம்
சங்கம் CMPபுதுமனை சகோதரர்கள் ஜோன்.

CMP லைன் ,
புதுமனை தெரு ,
மரியம்பள்ளி லைன் ,
கல்லுகொள்ளை , புது ஆலடித்தெரு ஆகியவை அடங்கும்.

இஜாபா பள்ளி , ஹனிஃப் பள்ளி , லத்திப் பள்ளி , மரியம் பள்ளி சித்திக் பள்ளி , செக்கடி பள்ளி ஆகியவை அடங்கும்.

👉 2 , இரண்டாவது மண்டலம்
சங்கம் MIDDLE ஜோன்.

நடுத்தெரு கீழ் புறம் , மேல்புறம் , கீழை கடைத்தெரு , வாய்க்கால் தெரு ஆகியவை அடங்கும்.

ரஹ்மானியா பள்ளி ,
மறைக்கா பள்ளி ,
தக்வா பள்ளி ஆகியவை அடங்கும்.

👉 3 , மூன்றாவது
மண்டலம்
சங்கம் A J நகர்,புதுபள்ளி ஜோன்.

ஆஸ்பத்திரி தெரு ,
செட்டித்தெரு , தட்டாரத்தெரு , A J நகர் , புதுதெரு வடபுறம் ஆகியவை அடங்கும்.

ஆயிஷா பள்ளி ,
புதுபள்ளி , AJ பள்ளி ஆகியவை அடங்கும்.

👉 4 , நான்காவது
மண்டலம்
சங்கம் NORTH - EAST ஜோன்.

ஆலடித்தெரு , வண்டிப்பேட்டை ,
மஹ்தும் பள்ளி லைன் , உமர் பள்ளி (சுரைக்கா கொள்ளை) பகுதிகள் அடங்கும்.

முகைதீன் ஜூம்ஆ பள்ளி , வண்டிப்பேட்டை பள்ளி , மக்தும் பள்ளி , கலீபா உமர் பள்ளி ஆகியவை அடங்கும்.

அந்த அந்த பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து

நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் உள்பட்ட முஹல்லாவை துமையான பகுதியாக மாற்றுவோம்.

வலிமையான ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்கி ,

பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும்
நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவோம்.

நம்முடைய நோக்கங்கள்.

1 , கண்காணிப்பு வலையத்திற்கு நமது பகுதியை , முஹல்லாவை கோண்டு வர வேண்டும்.

2 , பேரூராட்சி சம்பந்தப்பட்ட தெரு மின்விளக்கு , குப்பைகள் , குடிநீர் குழாய் உடைப்பு உள்ள குறைகளை கண்டறிந்து உடன் சரி செய்ய வேண்டும்.

3 , மின்சார வாரியம்
சம்பந்தப்பட்ட மின்கம்பி விழும் நிலையில் உள்ளவை மற்றும் emergency யாக உள்ளவைகள்.

4 , தெருவுக்குள் சந்தேக நபர்கள் வருகை ,
திருடன் வருகை ,
வெளி இடத்தில் இருந்து நம் பகுதிக்குள் வருகை
இது போன்ற வைகளை கண்காணிக்க வேண்டும்.

இதற்காக

தனி தனி குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.
அவைகள் துரிதமாக செயல்படும்.

மாற்றத்தை கொண்டு வருவோம்
இன்ஷாஅல்லாஹ்.

ஒத்துழைப்பு
தாருங்கள்.

நமது சங்கம் நமது நலன் .

Sent from my iPhone

Sunday, November 17, 2019

SHISWA மஹல்லாவாசிகள் குடும்ப சந்திப்பு (Family get together)

அஸ்ஸலாமு அலைக்கும். இன்று 15-11-2019 வெள்ளிக்கிழமை மாலை அமீரக SHISWA நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மம்ஸார் கடற்கரையில் நடந்தது. அதில் கீழ்காணும் விடயங்கள் மஸ்வரா செய்து முடிவெடுக்கப்பட்டன.

இன்ஷா அல்லாஹ் நம் சங்கத்தின் நூறாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அமீரகவாழ் SHISWA மஹல்லாவாசிகள் குடும்ப சந்திப்பு (Family get together) ஐக்கிய அரபு தேசிய தின விடுமுறையில் *துபாய் முஷ்ரிப் பார்க்* கில் 02-12-2019 திங்கள் கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைக்கும் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

வழக்கம்போல் குழந்தைகள், சிறார் சிறுமிகள், இளைஞர்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் (Games) நடத்துவது என்றும், பகலுணவுடன் (Lunch) மாலை தேநீர் (Tea & Snacks) வழங்குவது என்றும் முடிவெடுக்கபட்டது.

நம் தாய்ச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையிலும் சங்க கட்டுமானத்திற்கு நம் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் நடத்தப்படும் இந்நிகழ்வுக்கு அமீரகவாழ் SHISWA மஹல்லாவாசிகள் அனைவரும் பங்கெடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

வழமைபோல் குலுக்கல் முறையில் கவர்ச்சிகரமான மெகா பரிசுகளும், போட்டியில் வெல்வோருக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும், அல் மனார் இஸ்லாமிய அழைப்பு மைய நிகழ்வுக்கு நம் மஹல்லாவாசிகள் செல்வதற்குத் தோதாக ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை மாலை 5:00 மணிக்குள் முடித்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

அமீர்க SHISWA வாட்சப் குழுமத்தில் நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகளும், முனபதிவுக்கான தனி வாட்சப் குழு சுட்டியும் விரைவில் வைக்கப்படும்.

இப்படிக்கு,
SHISWA நிர்வாகிகள்
ஐக்கிய அரபு அமீரகம்

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)