Ads 468x150px

Labels

Friday, June 12, 2020

சங்கத்தில் செயற்குழு கூட்டம்

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*அல்ஹம்துலில்லாஹ்*

*சங்கத்தில் செயற்குழு கூட்டம் நல்லபடியாக நடந்தேரியது விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்*

Wednesday, June 10, 2020

சங்கத்தில் ஒருமனதாக சங்க நிர்வாகிகள்,சிஸ்யா நிர்வாகிகள் தாருல் நுஷ்ரா நிர்வாகிகள் ஜோன் நிர்வாகிகள்

இன்று(10/6/20) நம் சங்கத்தில் ஒருமனதாக சங்க நிர்வாகிகள்,சிஸ்யா நிர்வாகிகள் தாருல் நுஷ்ரா நிர்வாகிகள் ஜோன் நிர்வாகிகள் கலந்து கொண்டது

*சிஸ்வா குழுமத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் நமது சங்கம் எடுத்துள்ள இந்த முடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறோம் கொரொனா பாதிப்பால் உலகமெங்கும் உள்ள நம் மக்களும் கடுமையாக பொருளாதார பாதிப்பை அடைந்து இருக்கும் சூழலையும் கருத்தில் கொண்டே இப்படி சமச்சீரான சந்தா வசூலை செய்ய முடிவெடுத்துள்ளார்கள்*

இனி இந்த வசூலை எந்த முறையில் எந்த வகையில் வசூல் செய்யலாம் என்றும் எந்தெந்த நாடுகளில் சிஸ்வா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் யார் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசிக்குமாறு குழும ஆமீர் என்ற முறையில் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

Friday, June 5, 2020

நூற்றாண்டு விழா குர்ஆன் கிராத் போட்டி வெற்றியாளர்கள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூன் 05
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை சார்பில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் குர்ஆன் கிராஅத் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

இதில், அதிராம்பட்டினம், சென்னை, அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் சிறார்கள் மொத்தம் 464 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் சிறப்பிடம் பிடித்த வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்பு நிகழ்ச்சி புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக, மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம், மவ்லவி எம்.எஸ் அப்துல் ஹாதி ஆகியோர் கலந்துகொண்டு, குர் ஆன் கற்றலின் அவசியம் பற்றியும், போட்டி நடத்திய விதம் பற்றியும் மற்றும் தேர்வானவர்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

பின்னர், சங்க செயலாளர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர் கிராத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அறிவித்தார்.

இதில், 4 வயதுக்கு உட்பட்ட பிரிவில்.... 
ஏ.முகமது (முதலிடம்), டி.தஸ்பீஹா (இரண்டாமிடம்), எம்.எஸ் ஷனா, எம்.உஜைர், எஸ்.கதீஜா, எம்.ஹதீஜா, ஆர்.முகமது அயான் ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதில், 5 ~ 7 வயதுக்கு உட்பட்ட பிரிவில்....
எஸ். கதீஜா (முதலிடம்), எம்.ரம்லா (இரண்டாமிடம்), எம்.ஜெய்னா, எம் ஷபீனா, எச்.முகமது, பி.சல்வா, எச். நுஸைபா ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதில், 8 ~ 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில்....
ஏ.அஜீம் (முதலிடம்), ஏ.கிஃபாயத்துல்லா (இரண்டாமிடம்), எம்.முகமது சமீஹ், ஏ.சுஹைல், எம்.ஐ உசைத், ஏ.உமர் ஆபத், எச். மஹ்ரூஸ் ஆகிய 5 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

ஓவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. ஆயிரமும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ரூ.400 மதிப்பிலான சுவர் கடிகாரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க செயலர் எம்.எப் முகமது சலீம் வரவேற்றார். நிறைவில், சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத் தலைவர் அகமது அனஸ் நன்றி கூறினார். இந்நிகழ்வில், சங்க இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 

Sent from my iPhone

Thursday, June 4, 2020

SHISWA UAE நடத்திய கிராஅத் வெற்றியாளர்கள் தேர்வு முறை பற்றிய அறிவிப்பு

https://youtu.be/VHk1B8QXxFM

SHISWA UAE நடத்திய கிராஅத் வெற்றியாளர்கள் தேர்வு முறை பற்றிய அறிவிப்பு.

இந்த youtube சேனலை subscribe செய்து நாளைய வெற்றியாளர்கள் விபரத்திற்காக காத்திருங்கள்.

Sent from my iPhone

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)