Ads 468x150px

Labels

Monday, January 14, 2013

துபாயில் ஓர் குளுகுளு உதயம்!

இன்று (14-01-2013) மாலை 4:00 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மாநகரில் peach 'n' berry என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது. 
பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள peach 'n' berry ஐஸ் கிரீம் 
பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை 
வழங்கப்படும் என்று உரிமையாளர் ஜனாப். அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.
அதிரை சகோதரரின் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு வழங்கும்படி அதிரை அனைத்து முஹல்லா துபாய் கிளை தலைவர் சகோ.தமீம் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
செய்தி & புகைப்படம்: இப்ராஹிம். 

Sunday, January 13, 2013

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டம் !

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

கடந்த [ 11-01-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டத்திற்கு  AAMF’ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி, பெரிய ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் கமிட்டியின் நிர்வாகிகள் MMS. தாஜுதீன், VM. அப்துல் மஜீது, KSM. பகுருதீன், PMK. தாஜுதீன் ஆகியருடன் முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  ஜமீல் M. ஸாலிஹ், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அக்பர் ஹாஜியார் மற்றும் KSA. அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.



ஆண்டறிக்கையின் சிறப்பு அம்சங்கள் :
 
1) 18 பக்கங்களைக் கொண்ட AAMF’ன் ஆண்டறிக்கையை வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு விருந்தினர்களாக கூட்டத்தில் கலந்துகொண்ட பலரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.



 


2) AAMF’ன் சார்பாக இதுவரையில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், அவசரக் கூட்டங்கள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டவை மற்றும் செயல்படுத்தப்படக் கூடியவை ஆகியன தொடர்பாக உள்ள தகவல்கள் இடம்பெற்றன.


 

3) மேலும் AAMF’ன் சார்பாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், நிதி உதவிகள் ஆகியன தொடர்பான தகவல்களும் இடம்பெற்றன.
4) இந்தக் கூட்டத்தில் முதன் முறையாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி அவர்கள் தனது சிறப்புரையில் “மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் ஊர் பொதுமக்களின் பங்களிப்புகள் என்ன ? என்பது பற்றியும் மேலும் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுடன் அவர்களின் ஒத்துழைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?” என்பது குறித்தும் பேசினார்.
5)‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது அவர்களின் மேற்பார்வையுடன், சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் பங்களிப்புடன், ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ் அவர்களால் தயாரிக்கப்பட்ட AAMF’ன் திருத்தத்திற்குரிய சட்ட வரைவு அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அழித்தல் / திருத்துதல் / சேர்த்தல் ஆகியன இருந்தால், அவற்றை ஒரு வார கால அவகாசத்திற்குள் தெரியப்படுத்த அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
6) அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அமீரக கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட AAMF’ன் 2013 ஆம் ஆண்டிற்கான காலண்டர்கள் இலவசமாக விநியோகிகப்பட்டது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டன.
 



7) AAMF’ன் சார்பாக இனிவரும் கூட்டங்களை நமதூர் ஜாவியா பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு மஹல்லா சார்பாக நடத்தப்பட வேண்டும்’ என்று AAMF’ன் துணைச்செயலாளர் A. முஹம்மது முகைதீன் அவர்களால் வைக்கப்பட்ட வேண்டுகோளை எடுத்துக்கொண்டு விவாதம் செய்யப்பட்டன. இறுதியில் AAMF’ன் சார்பாக நடைபெற உள்ள சிறப்பு மற்றும் அவசரக்கூட்டங்களை ஜாவியா பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்றும், இதற்காக AAMF’ன் சார்பாக ஜாவியா நிர்வாகத்தினரை முறையாக அணுகி அனுமதி கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


8. AAMF’ன் வரவு-செலவு கணக்கு விவரங்கள் அனைத்தும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

9. AAMF’க்கு செலுத்த வேண்டிய மஹல்லா ஆண்டுச் சந்தா ரூபாய் 1000/- மற்றும் உறுப்பினர்களின் ஆண்டுச்சந்தா ரூபாய் 100/- ஆகிய தொகைகளை AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் செலுத்தும்படி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
 

10. கூட்டத்தின் நிகழ்ச்சிகள் மஹரீப் தொழுகைக்கு பின்பும் தொடர்ந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

11. நன்றியுரை : சகோ. B. ஜமாலுதீன் அவர்கள்.

12. AAMF’ன் முதல் ஆண்டு வெற்றிகரமாக முடிவுற்று, AAMF’ன் இரண்டாம் ஆண்டின் துவக்கக் கூட்டதை தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பாக அதன் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்துருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :
 
‘கிராம பஞ்சாயத்தார்களோடு சந்திப்பது தொடர்பாக’ தேதி மற்றும் இடம் முடிவு செய்வது குறித்து போதிய கால அவகாசம் இல்லாததால் இக்கூட்டதில் அவற்றை எடுத்துக்கொண்டு பேச இயலவில்லை. இதற்காக வருகின்ற 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4. 30 மணியளவில் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவன் நாடினால் ! விரைவில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர் - AAMF
அதிரை

Saturday, January 12, 2013

அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மாதாந்திர அமா்வு





பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம்த்தின்  மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவா் சகோ.A. அகமது அஸ்லம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

இடம் : அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையகம்- தேரா, துபை

கிராஅத்  : சகோ. அப்துல் காதர்

அமர்வு ஒழுங்கு  : சகோ. A. தமீம் காக்கா






 அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :

      1)  உறுப்பினர் சந்தாவை தீவிரப்படுத்தி, ஏழு பேருக்கு ஒருவர் பொறுப்பாக ஏற்று ஆண்டு சந்தாவை வசூலிப்பது.

      2)  25 போ் கலந்து கொள்ளும் அமா்வுகள் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையகத்திலும், அதற்கு மேல் கூடுதலாக கலந்து கொள்ளும் சிறப்பு அமர்வுகள் முன்கூட்டி பதிவு செய்த இடத்திலும் நடத்துவது.

      3)  AAMF-ன் காலண்டரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில் உள்ள  அனைத்து பள்ளிகளில் பகிர்ந்து வைப்பது. காலண்டருக்கான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பங்கு தொகையை சந்தா வசூலில்ருந்து கொடுப்பது. 
 
      4)  சகோ.F.இப்ராஹிம் அவர்கள் அமீரகத்தில் உள்ள இந்திய துதரகத்தில் கிடைக்க பெரும்  கீழ் காணும் அரசு சம்மந்தமான படிவங்களின் பிரதியை அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம்  தலைமையகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்லாம், மேலும்  இந்த அனைத்து படிவங்களும் மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

A)   Endorsement ECNR
B)   Change of Photograph
C)  Change of Spouse Name
D)  damage passport
E)   Divorce Death
F)   Expiry of Validity
G)  Issue of New Passport for Child (Registration)
H)  New Passport - Abu Dhabi
I)     New passport – Dubai
J)   Registration of Birth
K)   Sponsors declaration
L)   NRI_Certificate/ Sponsorship for College Admission
M)  Passport - Miscellaneous services
N)  Personal Particulars Abu Dhabi
O)  Personal Particulars
P)   Form-6A-for-registration-of-NRIs-in-the-voters-list

Friday, January 11, 2013

அமீரக AAMF–ன் மாதந்திர செயற்குழு கூட்டம்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: செயளாலர் V.T.அஜ்மல் ROOM
 தேதி: 10-01-2013

அமீரக AAMF–ன்  மாதந்திர செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.


 அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :

    1)  செயற்குழுக்கூட்டத்தில் காலண்டர் விஷயமாக விவாதிக்கப்பட்டு ஒவ்வொரு முஹல்லாவுக்கும் உள்ள பங்கிட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றி அறிவிக்கப்பட்டது.

   2)  அமீரக AAMF –ன் செயற்குழு உறுப்பினர்கள் (நிர்வகதிதில் உள்ள மாற்றங்கள்) விபரம் அடுத்த செயற்குழுவில் அறிவிக்கப்பட்டு பின் இணைய தளத்தில் வெளியிடுவது என்று தீா்மானிக்கப்பட்டது.

Thursday, January 3, 2013

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்…

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்

1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).

2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).

3. அதிகமாக உழைத்தல் (Extra work).

4. தன்னம்பிக்கை ( Self-confidence ).

5. சேமிப்பு ( Saving ).

6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).

7. தலைமைப் பண்புகள் ( Leadership ).

8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).

9. கற்பனைத் திறன் ( Imagination )

10. சுயக் கட்டுப்பாடு ( Self control).

11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).

12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).

13. கவனமாக செயல்படுதல் ( Concentration).

14. ஒத்துழைப்பு ( Co-operation)

15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).

16. சகிப்புத்தன்மை ( Tolerance ).

17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).

18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).

19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).

20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).

Tuesday, January 1, 2013

சளியைப் போக்கும் தும்பை!

இந்தக் குளிர் காலத்தில் பலரும் ஜலதோஷம், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு அருமருந்தாகத் திகழக்கூடியது தும்பை. கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் தும்பை,   எளிதாகக் கிடைக்கக்கூடியது.

பச்சைப் பசேல் நிறத்தில், கத்தி போல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். முழுத் தாவரமுமே மருத்துவக் குணம் கொண்டது என்றாலும், இலையும், பூக்களும் மருத்துவ குணம் அதிகமுள்ளவை. தும்பையின் சில மருத்துவ மகத்துவங்களைப் பார்க்கலாம்...

சளியைப் போக்க..... உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும் தும்பை. சளி பிடிப்பதால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாறில் தேன் கலந்து அருந்தினால் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஜலதோஷம்....... 20 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப் பாரம், சிறுரோகம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தீரும். மலச்சிக்கல்...... மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. தும்பை இலையை நன்கு   அலசி அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாயுத்தொல்லை..... வாயுவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையில் இருந்து விடுபட தும்பை இலையின் சாறைத் தொடர்ந்து மூன்று நாட்கள்ந்தக் குளிர் காலத்தில் பலரும் ஜலதோஷம், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு அருமருந்தாகத் திகழக்கூடியது தும்பை.

கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் தும்பை,  எளிதாகக் கிடைக்கக்கூடியது. பச்சைப் பசேல் நிறத்தில், கத்தி போல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். முழுத் தாவரமுமே மருத்துவக் குணம் கொண்டது என்றாலும், இலையும், பூக்களும் மருத்துவ குணம் அதிகமுள்ளவை.

கண்..... கணினியில் வேலை செய்பவர்களின் கண்கள் விரைவாகச் சோர்வடையும். இதனால் கண்களில் ஒருவிதமான வலி ஏற்படும். அதைப்  போக்கவும், கண்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளை அகற்றவும் தும்பை இலையின் சாறு சிறந்த மருந்தாகும்.

தொண்டைச் சதைவளர்ச்சி.... 'டான்சில்ஸ்' எனப் படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மை இதற்கு உண்டு. தும்பையின் தளிர் இலைகளைப் பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப் பருப்பு கலந்து வேக வைத்து, பின்னர் புளிக் கரைசலை ஊற்றி சிறி துநேரம் கழித்து தாளித்துக் கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு........  தும்பைப் பூவின் சாறு 4 சொட்டு, உத்தாமணிச் சாறு 4 சொட்டு, மிளகுத்தூள் 3 கிராம் இந்த மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும். பெண்களுக்கு: வாயுப் பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும்.

அவர்கள், தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளா றுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)