Ads 468x150px

Labels

Saturday, January 12, 2013

அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மாதாந்திர அமா்வு





பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம்த்தின்  மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவா் சகோ.A. அகமது அஸ்லம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

இடம் : அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையகம்- தேரா, துபை

கிராஅத்  : சகோ. அப்துல் காதர்

அமர்வு ஒழுங்கு  : சகோ. A. தமீம் காக்கா






 அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :

      1)  உறுப்பினர் சந்தாவை தீவிரப்படுத்தி, ஏழு பேருக்கு ஒருவர் பொறுப்பாக ஏற்று ஆண்டு சந்தாவை வசூலிப்பது.

      2)  25 போ் கலந்து கொள்ளும் அமா்வுகள் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தலைமையகத்திலும், அதற்கு மேல் கூடுதலாக கலந்து கொள்ளும் சிறப்பு அமர்வுகள் முன்கூட்டி பதிவு செய்த இடத்திலும் நடத்துவது.

      3)  AAMF-ன் காலண்டரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவில் உள்ள  அனைத்து பள்ளிகளில் பகிர்ந்து வைப்பது. காலண்டருக்கான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பங்கு தொகையை சந்தா வசூலில்ருந்து கொடுப்பது. 
 
      4)  சகோ.F.இப்ராஹிம் அவர்கள் அமீரகத்தில் உள்ள இந்திய துதரகத்தில் கிடைக்க பெரும்  கீழ் காணும் அரசு சம்மந்தமான படிவங்களின் பிரதியை அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கம்  தலைமையகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்லாம், மேலும்  இந்த அனைத்து படிவங்களும் மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

A)   Endorsement ECNR
B)   Change of Photograph
C)  Change of Spouse Name
D)  damage passport
E)   Divorce Death
F)   Expiry of Validity
G)  Issue of New Passport for Child (Registration)
H)  New Passport - Abu Dhabi
I)     New passport – Dubai
J)   Registration of Birth
K)   Sponsors declaration
L)   NRI_Certificate/ Sponsorship for College Admission
M)  Passport - Miscellaneous services
N)  Personal Particulars Abu Dhabi
O)  Personal Particulars
P)   Form-6A-for-registration-of-NRIs-in-the-voters-list

1 comment:

  1. அனைவருக்கும் என் இனிய சலாம்!
    இவ்வமர்வில் கலந்துக்கொண்ட அனைத்து நல் உள்ள்ங்களுக்கு வாழ்த்துக்கள்!!!
    எடுக்கப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமானது "சந்தா வசூல்", காரணம் எந்த ஒரு அமைப்பும் திறம்பட செயல்படுவதற்கு மிக முக்கியம் அதன் கையிருப்பு தொகை, அது இருந்தால்தான் அந்தந்த சமூகத்தின் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து நற்காரியங்களை செய்வதற்கு ஏதுவாக அமையும். மேலும் ஒரு சிலரிடம் மட்டும் தேவையான தொகையை வசூல் செய்து நற்காரியங்களை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம், எனவேதான் பலரும் சேர்ந்து பஙகளிப்பு செய்வதன் மூலம் அதன் சுமை மிக மிக எளிதானதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    நமது மஹல்லாஹ் சகோதரர்கள் பெறும்பாலோர் சென்ற வருட சந்தாவை கூட இன்னும் செலுத்த தவறியவர்களாகவே உள்ளனர், எனவே அவரவர்கள் தாங்களாகவே முன் வந்து அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொருத்த்ம் நாடி சந்தா தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமோ அல்லது அதற்குறிய வங்கி கணக்கில்(Joint A/c) செலுத்துமாறு நிர்வாகிகளின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    வஸ்ஸலாம்....கே.ஷபீக் அஹமது

    ReplyDelete

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)