Ads 468x150px

Labels

Friday, October 26, 2012

துபாய் AAMF ஹஜ் பெருநாள் சந்திப்பு (2012) துளிகள் [ காணொளி ] !






துபாய் AAMF நோன்பு பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)


அஸ்ஸலாமு அலைக்கும், 
அல்லாஹ்வின் பேரருளால் 26-10-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் அதிகாலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

காலை 7:10 மணிக்கு பெருநாள் தொழுகை தொடங்கியது. சரியாக 8:10 மணிக்கு பராஹா சாலை வாசலருகே அதிரைவாசிகள் அணிஅணியாகக் கூடத்தொடங்கினர்.




 சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வீடியோ கேமரா மற்றும் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞர்கள் குழுவினர் அதிரைவாசிகளை சுற்றிச் சுற்றி படம் பிடித்தது, மைதானத்திற்கு வந்திருந்த பிற ஊர்/நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.
 அதிரைவாசிகள் 350 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தைக் காணமுடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.














அதிரைவாசிகளுக்கு இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.
இந்த இனிய சந்திப்பின்போது வந்திருந்த அதிரைவாசிகளுக்கு "AAMF" சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

Wednesday, October 24, 2012

AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்



பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

அல்லாஹ்வின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிரை அனைத்து மஹல்லா 
கூட்டமைப்புக்கு (AAMF) அடித்தளமாக கடந்த வருட துபாயில் நடந்த நோன்பு பெருநாள் சந்திப்பு அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன்தொடர்ச்சியாக, அதிரை, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளூரளவிலும் வெளிநாட்டிலும்அதிரைவாசிகளை ஒருங்கிணைக்கும் ஒரே அமைப்பு இல்லாத குறையை நமது  AAMF நிவர்த்தி செய்யும் நோக்கில்பல்வேறு நாடுகளிலுள்ளஅதிரைவாசிகளுடன் சந்திப்புகளை நடத்திஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும்பெருநாட்களன்று ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவ்வகையில், இன்ஷா அல்லாஹ்,இவ்வருடமும் ஹஜ்  பெருநாளன்று துபாய் - டேரா ஈத்கா(Deira Eid Musallah) மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.எனவே, பெருநாள் தொழுகை முடிந்த உடன்சென்றவருடத்தைப் போன்றே ஈத்காமைதானம் வாசலருகே அமீரகத்திலுள்ள நமதூர் சொந்தங்கள் ஒன்றுகூடிமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் நீங்களும் கலந்து கொள்வதோடு ஏனைய அதிரைநண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வரும்படி அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு: இத்தகைய சந்திப்புகள் மூலமேவெளிநாட்டிலுள்ளஅதிரைவாசிகளுக்கிடையேபுரிந்துணர்வும் ஒற்றுமையும் பலம்பெறும் என்பதால் சிரமம் பாராதுகலந்துகொண்டு உங்கள் பங்களிப்பைஉறுதிசெய்து ஒத்துழைக்கவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும்எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Mr. Ismail  055-6077680                 கடற்கரை தெரு ஜீம்மா பள்ளி மஹல்லா
Mr. Ajmal  050-4963848     தாஜீல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு மஹல்லா
Mr. Meeramohindeen 055-2320145   அல் மதரஸத்துன் நுருல் மஹம்மதியா சங்கம் கீழத் தெரு
Mr. Mohideen  050-5785239     மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நெசவுத் தெரு
Mr. Naina  050-7397093    முகைதீன் ஜீம்மா பள்ளி மஹல்லா தரகர் தெரு
Mr. Bashir 050-9228114                 மிஷ்கீன் சாஹிப் பள்ளி மஹல்லா
Mr. Abdul Jabbar   055-8219432            சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா

அன்புடன்,
அனைத்து
 மஹல்லாஹ் கூட்டமைப்பு(AAMF)
ஈத்
 பெருநாள் சந்திப்பு குழு
UAE

Tuesday, October 23, 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்.


ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

குறிப்பு:- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் – புகாரிமுஸ்லிம்

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்

குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி

பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்

- ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)

- ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)

- மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)

உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.

நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை

- ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)

- ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)

- அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)

உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம்

Friday, October 12, 2012

அமீரக AAMF-ன் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

இடம்: தாஹா நெசவு தெரு முஹல்லா, சார்ஜா
 தேதி: 11-10-2012

அமீரக AAMF-யின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் தலைவர்  A. தமீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வமர்வில் ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்...

1. AAMF - யின் 2013 ஆண்டு காலண்டர் வினியோகிப்பது சம்மந்தமாக ஸ்பான்ஸ்சர்களை அணுகி காலண்டர்காண பொருளாதாரத்தை ஈட்டுவது, அது முடியாத பட்சத்தில் அனைத்து முஹல்லாக்களின் பங்களிப்புடன் தொகையை வசூழித்து அச்சிட்டு வினியோகிப்பது.
2. தரகர் தெரு முஹல்லா ஜாமாத்தை ஒருகிணைப்பது.
3. அதிரையில் AAMF சட்டப்புர்வமாக பதிவு (REGISTER) செய்வதை துரிதப்படுத்துவது.

இப்படிக்கு,


AAMF-UAE

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)