Ads 468x150px

Labels

Wednesday, June 17, 2015

இந்தியாவில் தடை செய்யப்பட்ட 400 தயாரிப்புகள்..பெரும்பாலானவை விற்பனையில்..பகீர் ரிப்போர்ட்.

டெல்லி: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் மேகி மட்டும் தடை செய்யப்பட்டவில்லை. பிரபல பெரும் நிறுவனங்களின் தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.























Wednesday, June 10, 2015

சம்சுல் இஸ்லாம் சங்க புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது ஒத்திவைப்பு ! பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !

சம்சுல் இஸ்லாம் சங்க புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது ஒத்திவைப்பு ! பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சங்க அலுவலத்தில் நடைபெற்றது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். ஏனைய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சங்க கட்டிடம் விரிவாக்கப் பணி குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்த ஹாஜி முஹம்மது சேக்காதியார்அவர்கள் ராஜினாமாவை அடுத்து புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வருகை போதுமானதாக இல்லை என்பதால் புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது எதிர்வரும் ஜூலை 20 தேதி கூட்டம் நடத்தி தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இணைச்செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் நடப்பாண்டின் ஆண்டரிக்கை எடுத்துரைத்தார்.

இன்றைய கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 
 
 

Thank 
Adirai News

Saturday, June 6, 2015

சங்க செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் :

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வருடாந்திர கூட்டம் எதிர்வரும் 10.6.15 தேதி அன்று நடைபெற இருக்கிறது .இக்கூட்டத்தில் சங்க செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யலாம் .இந்த பதவிக்கு போட்டியிட 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் சம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினராகவும்  இருக்கவேண்டும் .

Thanks to Adiraixpress

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)