Ads 468x150px

Labels

Friday, January 26, 2018

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 69வது குடியரசு தின கொண்டாட்டம்!

சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் 69ம் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சங்கத்தலைவர் அபூபக்கர் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். சங்க செயலாளர் அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் செயலாளர் முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். பள்ளி மாணவர் சஹல் அழகிய குரலில் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கினார். இதில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பேரா.அப்துல் காதர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் தேச கீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்தை பாடினர். முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் துஆ ஓத, சங்க துணை செயலாளர் அப்துல் ரஹீம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இணிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக வயதை பொருட்படுத்தாமல் குளிர் சூழலில் பல மூத்த குடிமகன்கள் கலந்து கொண்டு தங்களின் மகிழ்வை வெளிப்படுத்தினர்.


Thanks to Adirai Pirai


Sent from my iPhone

Saturday, January 13, 2018

பட்டுக்கோட்டை MLA சி.வி.சேகரை சந்தித சங்க நிர்வாகிகள் கோரிக்கை!

அதிரை சேர்மன் வாடியிலிருந்து மரைக்கா குளம் செல்லும் சாலை மற்றும் ஜம் ஜம் உணவகத்திலிருந்து நடுத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈ.சி.ஆர் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் தரமான முறையில் அமைத்து தர வேண்டும் என அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தலைவர் அபூபக்கர் தலைமையில் பட்டுக்கோட்டை எம்.எம்.ஏ சி.வி.சேகரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பின் போது தஞ்சை மாவட்ட அதிமுக சிறுபாண்மை பிரிவு துணை தலைவர் அஜீஸ், ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம் ஆகியோ உடனிருந்தனர்.


Sent from my iPhone

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)