Ads 468x150px

Labels

Friday, February 27, 2015

அமிரகத்திள் ஓதப்படும் ஜீம்மா உரை 27-02-15


தலைப்பு : நடுநிலையாக நடந்து கொள்வோம்!
                      மனித நேயத்தை காப்போம்!













Saturday, February 21, 2015

அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாஹ்வாசிகள் ஒருங்கிணைப்பு (GET TOGETHER) கூட்டம் -PART-2






































அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாஹ்வாசிகள் ஒருங்கிணைப்பு (GET TOGETHER) கூட்டம் -PART-1


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஐக்கிய அரபு அமீரகம் துபாய் முஷ்ரிஃப் பார்க்கில் அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் ஒன்று கூடலும், புதிய அமீரக நிர்வாகிகளின் அறிமுக கூட்டமும் (20-02-2015) இன்று இனிதே நடைபெற்றது.
துபாய்இ அபுதாபி, ஷார்ஜா, ராசல் கைமாவிருந்து 350 பேர் தங்கள் குடும்பம், பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர்.

காலை 10:30 மணிக்கு புழுதிப் புயலையும் பொருட்படுத்தாமல் சங்க முஹல்லாவாசிகள் ஆர்வத்துடன் குழுமத் தொடங்கினர்.
ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுவையான பிரியாணி உணவு பரிமாறப்பட்டது.
பிற்பகல் 2:00 மணி முதல் குழந்தைகளுக்கான சாக்லெட் கலக்சன், பிஸ்கட் கவ்வுதல், சிறார்களுக்கு சாக்கு ஓட்டம், சிறுமிகளுக்கு லெமன் இன் ஸ்பூன் ரேஸ் ஆகியவை வெகு ஆராவாரத்துடன் நடந்தன.
அதுபோல், இளைஞர்களுக்கு சாக்கு ஓட்டம்இ ஓட்டப்பந்தையம் ஆகியவையும், பெண்களுக்கு ஊசியில் நூல் கோர்த்தல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.
அஸர் தொழுகைக்குப் பிறகு தேநீர் பரிமாறப்பட்டது. பிறகு புதிய நிர்வாகிகள் அறிமுகம், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள், சங்கத்தின் தேவை ஆகியவை குறித்து மூத்தோர்கள் முன்னிலையில் சிற்றுரைகளாகப் பேசப்பட்டன.
இறுதியில், போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவரின் பெயர்களும் குலுக்கிப் போடப்பட்டு மூவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசுகளை சாகுல் ஹமீது காகா (Mirdif), நூர் காகா, அப்துல்லாஹ் ஹுசைன் (Typing) மற்றும் அஹமது சலீம் ஸ்பான்சர் செய்தனர்.

பரிசளிப்பு சிறுவர்கள்

Chocolate Picking சிறுவர்கள்
முதல் பரிசு : சல்மான்
இரண்டாம் பரிசு : அஜிம்
மூன்றாம் பரிசு : மஹ்ரஸ் இர்சாத்

Biscuit கடித்தல் சிறுவர்கள்
முதல் பரிசு அப்துல்லாஹ்
இரண்டாம் பரிசு அஃப்ரா தஹ்சினா
மூன்றாம் பரிசு தஹ்சினா

சாக்குப்போட்டி (சிறுவர்கள்)
முதல் பரிசு அஹமது யூசுப்
இரண்டாம் பரிசு சுஹையில்
மூன்றாம் பரிசு சஃபிக்

லெமன் மற்றும் ஸ்பூன் (சிறுவர்கள்)
முதல் பரிசு ஆசிலா
சாக்குப்போட்டி (பெரியவர்கள்)
முதல் பரிசு சகோ. சலீம்

ஓட்டப்பந்தையம் (பெரியவர்கள்)
முதல் பரிசு சகோ. சமீம்
இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வு அரபு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. பலர் தங்கள் குழந்தைகளையும் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினர். பார்க்கில் வந்திருந்த ஏனையோரும் இந்நிகழ்வை கண்டு ரசித்ததோடு போட்டோவும் எடுத்துச் சென்றனர்.
வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி மஃரிப் தொழுகையுடன் முஹல்லாவாசிகள் மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர்.


     


இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)