Ads 468x150px

Labels

Friday, November 29, 2019

மஷுரா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைக்கும்

நவ : 29.19

இன்று மாலை
நமது சங்கத்தில்
நடைபெற்ற மஷுரா
மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

கிராத் : இப்ராஹிம் மௌலானா

அறிமுக உரை : சங்கத்தின் செயலாளர் அவர்கள் அருமையாக இரண்டு விசயங்கள் பற்றி அதன் விபரங்களை தெரிவித்தார்கள்.

அதன் சுருக்கம்.

1, நான்கு மண்டலங்களின் விரிவாக்கம் முன்னேற்றங்கள்
அதன் விபரங்கள்.

2 , நூற்றாண்டு விழா சம்பந்தமாக மக்களுக்கு எப்படி சிறப்பானதாக அமைவது பற்றி பேசப்பட்டது.

முதலில் நான்கு மண்டலங்களை பற்றி விரிவாக
சொல்லப்பட்டது.

நான்கு மண்டலங்க ளின் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள குறைகளை அதன் பொறுப்பாளர்கள் விபரங்கள் சொன்ன விதம் அருமை.

👉 விரைவில் அதிரை பேரூராட்சி S I திரு. அன்பரசன் அவர்களையும் ,

நான்கு மண்டல பொருப்பாளர்களையும் அறிமுகம் செய்து , அவர்களுக்கு அறிமுக லெட்டர் கொடுக்க வேண்டும்.

நமது சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

👉 நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
புதிய கட்டிடத்திற்கு

பெயர் நுற்றாண்டு நிறைவு மண்டபம் என்று வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

👉 நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆலிம்களின் தலைமையில்

ஊர் சார்பில்
கிராத் போட்டி , குர்ஆன் மனன போட்டி, குர்ஆன் பார்த்து ஓதும் போட்டிகள் , இஸ்லாம் சம்பந்த மான கட்டுரை போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

👉 நூற்றாண்டு விழா மலர் வெளியீடு சம்பந்தமாக தனி குழுவும் , மற்றவைகளுக்காக முக்கியமானவர்கள்
தனியாக 20 க்கும் மேற்பட்டவர்கள் தனி குழுவாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

இவர்கள் ஓராண்டு முழுவதும் நடத்துவார்கள்.

நூற்றாண்டு விழாவில் விளையாட்டு சம்பந்தப்பட்டவைகள் எதுவும் நடைபெறாது என்று முடிவு செய்யப்பட்டது.

👉 நான்கு மண்டலத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு I D கார்டு தனியாக கொடுக்கப்படும்.

👉 நான்கு மண்டலத்தில்
தினமும் மஹ்ரிப் முதல் இரவு 9 மணிவரை மாணவர்களுக்கு நான்கு டியூசன் சென்டர் வைத்து நடத்துவது .

👉 நான்கு மண்டலங்களிலும்
நான்கு இஸ்லாமிக் லைப்ரரி வைப்பது
அதில் தமிழ் , ஆங்கிலம் தினசரி நாளிதழ்கள் உள்ளிட்டவை வழங்குவது.

இப்படி அருமையான திட்டங்களை சங்கத்தின் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இன்ஷாஅல்லாஹ்
ஜனவரி 1 ந்தேதி புதிய கட்டிடம் திறக்கப்படும் என்றும் சொன்னார்கள்.

இந்த அமர்வுக்கு தன்னார்வ இளைஞர்கள் , சமூக ஆர்வலர்கள் , பெரியோர்கள் மற்றும் நான்கு ஜோன்களில் உள்ளவர்கள்
என்று 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது .

அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

நிறைவாக துவாவுடன் அமர்வு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)