Ads 468x150px

Labels

Monday, December 23, 2013

மரண அறிவிப்பு - அபுல் ஹசன் / மேட்டுத்தெ​ரு(இரங்கல் செய்தி)


அதிரை - மேட்டுத்தெருவைச் சார்ந்த மர்ஹும் சம்சுதீன் அவர்களின் மகனும்,டாக்டர் சாகுல் ஹமீது,அப்துல் ஹக், அப்துல் ரவூஃப், அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பானாருமாகிய அபுல்ஹசன் இன்று (23-12-2013) திங்கள் பின்னேரம் 10:00 மணியளவில் வஃபாதானார்கள்.

இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அபுல் ஹசன் அவர்கள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளராக மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்கள். அன்னாரது இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் மஹல்லாவாசிகள் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இப்பேரிழப்பை தாங்கும் மனோசக்தியையும், பொறுமையையும் எல்லாம்வல்ல அல்லாஹ் உற்றார்-உறவினர்கள் அனைவருக்கும் வழங்க துஆச் செய்வோமாக. ஆமின்.

இப்படிக்கு,
ஹாஜி. உமர் (தலைவர்)
ஹாஜி.M.S.ஷிஹாபுத்தீன் (துணை தலைவர்)
ஹாஜி.'அதிரை' அஹமது (பொருளாலர்)
ஹாஜி.M.I.முஹம்மது பாக்கர் (இணை செயலர்)

மற்றும்

சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள்
துபாய், லண்டன் & ஆஸ்திரேலியா

Saturday, December 21, 2013

அதிரை குளங்களை வளமாக்க சம்சுல் இஸ்லாம் சங்கம் நிதியுதவி


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),

 

 நமதூர் குளங்களுக்கு CMP கால்வாய் வழியாக ஆற்றுநீரைக் கொண்டுவரும் முயற்சியில் அதிரை பேரூராட்சி சேர்மன் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருப்பதும்இதற்காக அதிரைவாசிகள் சிலர் நன்கொடை வழங்கினர். இந்நிலையில்திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்துமுடிக்க கூடுதல் செலவுகள் எதிர்பார்க்கப் படுவதால்வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரைவாசிகளிடமிருந்து நிதியுதவி கோரப்பட்டிருந்தது.

 

இதனடிப்படையில், அமீரக கிளை சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் சகோ.அஸ்லம் வேண்டுகோளுக்கினங்கஇதற்கான ஏற்பாட்டை சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆலோசகர் சகோ.K.ஷஃபீக் மற்றும் சகோ.ஏர்லிங் தமீம்(செயலாளர்), சகோ.F.இப்ராகிம்(து.தலைவர்), சகோ.கமாலுதீன் ஆகியோர் ஈடுபட்டனர், அவசரத்தேவையின் சூழ்நிலை கருதி ஐக்கிய அரபு அமீரகம் சம்சுல் இஸ்லாம் கிளை சார்பில் ரூ.25,000 அனுப்பி வைக்கப்பட்டது.

 

அதுபோல்பிறநாடுகளிலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்க கிளைகளும் உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, December 1, 2013

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க சிறப்பு கூட்டதிற்கு முஹல்லா வாசிகளுக்கு அழைப்பு

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சிறப்புக்கூட்டம் எதிர்வரும் (04-12-2013) புதன்கிழமை மாலை 4 மணியளவில் சங்கத்தில் நடைபெற உள்ளதால் அதில் தவறாது கலந்துகொள்ளும்படி நமது மஹல்லாவாசிகளை அன்புடன் கேட்டுககொள்கிறேன்.

Wednesday, November 13, 2013

துபை சம்சுல் இஸ்லாம் சங்க குடும்ப சந்திப்பு VIDEO

கடந்த வெள்ளிக்கிழமை (08-11-2013) துபாயில் நடந்த SIS குடும்ப சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும்  முற்றிலும் புதிய, உற்சாகமான அனுபவம் ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் குழந்தைகள் மற்றும்  மஹல்லாவாசிகளிடையே பரஸ்பர புரிந்துணர் புதுப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
 

துபை சம்சுல் இஸ்லாம் சங்க குடும்ப சந்திப்பு போட்டிகளில் வென்றவர்கள்!

கடந்த 8/11/2013 அன்று துபாய் முஷ்ரிஃப் பார்க்கில் நடந்த சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா குடும்ப சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.  அவற்றில் கலந்து கொண்ட முதல் மூன்று இடங்களைப் பிடித்த வாகையர்களின் விபரம்:



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹல்லாவாசிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் விபரங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பரிசு வென்றவர்கள் விபரம்:

முதல் பரிசு   : அரை பவுன் தங்கக்காசு*
நிஜாமுதீன் (அராமக்ஸ்)
செல்பேசி : 050 - 6511692


இரண்டாம் பரிசு   : கால் பவுன் தங்கக்காசு* + டின்னர் செட்**
முஹம்மது முஹைதீன் (கொழும்பு ஸ்டோர்)
செல்பேசி : 055 - 1080577


மூன்றாம் பரிசு   : கால் பவுன் தங்கக்காசு*
இர்ஷாத் அஹமத்
செல்பேசி : 050 - 5534237


Monday, November 11, 2013

துபை சம்சுல் இஸ்லாம் சங்கம் குடும்ப சந்திப்பு (2013) - தொகுப்பு


கடந்த வெள்ளிக்கிழமை (08-11-2013) துபாயில் நடந்த SIS குடும்ப சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும்  முற்றிலும் புதிய, உற்சாகமான அனுபவம் ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் குழந்தைகள் மற்றும்  மஹல்லாவாசிகளிடையே பரஸ்பர புரிந்துணர் புதுப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.  குறிப்பாக வெளிநாட்டு வாழ்க்கையில் கணவர்மார்களின் பணி அழுத்தம் காரணமாக குடும்பத்தினரும் இத்தகைய  மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு அரிதாகக் கிடைக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்நிகழ்வு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததைக் காணமுடிந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடு முதல் பரிசளிப்புக்குப் பிறகு ஏக்கத்துடன் கலைந்து சென்றதுவரையிலான நிகழ்வுகளை அதிரை  இணையதள வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறேன்.

1) கடந்த ஹஜ் பெருநாளன்று கோர்ஃபக்கான் கடற்கரையில் ச.இ.ச மஹல்லாவாசிகள் குடும்ப பெருநாள் சந்திப்பு  நடந்தது. போதிய முன்னேற்பாடுகளின்றி நடத்தப்பட்டதால் பெரும்பாலோருக்குக் கலந்துகொள்ளும் வாய்ப்பு  கிடைக்கவில்லை. ஆகவே, அத்தகைய சந்திப்பை மீண்டும் ஏற்படுத்துவதுதென முடிவு செய்யப்பட்டது.

2) இதற்கான திட்டமிடலை சகோ.ஏர்லிங் தமீம் அவர்களின் தலைமையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி துபாய்  மம்சார் கடற்கரையில் மஹல்லாவாசிகளின் அமர்வில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

3) நவம்பர் 8,2013 வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப் பார்க்கில் நடக்கும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சிக்கான உணவுக்கான  ஏற்பாடுகளை சகோ.அப்துல் ஹக் (ETA) மற்றும் நூர் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர்.

4) குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு சகோ.சாகுல் (தலைவர், அபுதாபி-அய்மான்) (பரிசு பேக்கிங்)  மற்றும் N.ஜமாலுதீன் (போட்டிகள் ஒருங்கிணைப்பு) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

5) சகோ.ஏர்லிங் தமீம் மற்றும் ஷஃபீக் ஆகியோர் அமீரகத்திலுள்ள SIS மஹல்லா குடும்பத்தினரைத் தொடர்பு  கொண்டு முன்பதிவு மற்றும் பிறஏற்பாடுகளைச் செய்வதற்கான பொறுப்பேற்றுக் கொண்டனர்.

6) காலை 9 மணிமுதல் பார்க்கில் வரத்தொடங்கிய ச.இ.ச மஹல்லாவாசிகளை தொழுவதற்கான பள்ளி மற்றும்  ஒளு செய்யுமிடம், கழிப்பறை வசதியுள்ள மரநிழலுடன் பசுமையான புள்வெளியில் ஒதுக்குப்புறமான இடத்தை  தேர்வு செய்து ஓரிடத்தில் குழுமினர்.

7) மதிய உணவாக ஆம்பூர் கறிபிரியாணி, வெங்காய ராய்தா, பாயசம் ஏற்பாடு செய்யப்பட்டு ஜும் ஆ தொழுகை  முடிந்த பிறகு பரிமாறப்பட்டது.

8) குழந்தைகளுக்கான சாக்லெட் பொறுக்குதல் (கேன்டீஸ் கலெக்சன்) போட்டியுடன் விளையாட்டுப் போட்டிகள்  உற்சாகமாகத் தொடங்கின. 3+ வயதுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கையில் கோப்பையுடன் போட்டிக்குத்  தயாராக இருந்தது பார்வையாளர்களை மட்டுமின்றி பார்க்கிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தையும் கவர்ந்தது.  இப்போட்டியில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மண்ணில் விழுந்து வீணாகாதபடி தரமான பேக்கிங்  செய்யப்பட்ட சாக்லெட் பயன்படுத்தப்பட்டது.மேலும் இதன்மூலம் சுத்தம் குறித்த விழிப்புணர்வும் குழந்தைகளிடம்  ஏற்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

9) அடுத்ததாக பேக்-பால் ரேஸ் (BACK BALL RACE) என்ற புதுமையான போட்டி நகைச்சுவையாகவும் பார்ப்போர்  வியக்கும்படியாகவும் இருந்தது.இப்போட்டியில் ஒரு பந்தை இருவர் முதுகில் தாங்கிப் பிடித்தபடி முன்னேறி ஓட  வேண்டும். பந்து கீழே விழுந்தால் போட்டியில் தோற்க நேரிடும்.ஒருவர் வேகமாக ஓடினாலும் பந்து கீழே விழும்.  ஆனாலும் பரஸ்பர ஒத்துழைப்புடன்,கூட்டாக பந்தை முதுகில் தாங்கியபடி ஓடியது முற்றிலும் வித்தியாசமான  பந்தயம்!

10) சாக்கு ஓட்டப்பந்தயத்திற்கான சாக்குகளைத் தேடியபோதுதான் வளைகுடாவில் அரிசி சாக்குகள் 20 கிலோ  கொள்ளளவு கொண்டவை என்பது தெரிய வந்தது. எனினும் தேடிப்பிடித்து மைதா சாக்குகளைத் திரட்டி நான்கு  கட்டங்களாகப் போட்டிகளை நடத்தி முடித்தோம்.பார்வையாளர்களாக இருந்த வெளிநாடு மற்றும் அரபியர்களுக்கு  இந்தப்போட்டி முற்றிலும் வித்தியாசமானதாக இருந்ததை அரபுகுழந்தைகளும் இப்போட்டியை கைதட்டி ரசித்தபடி  உற்சாகப் படுத்தியதிலிருந்து அறிய முடிந்தது.

11) ஆண்களுக்கான ஓட்டப்போட்டியில் 40 வயதுக்குட்பட்டவர்கள் & 40 வயதைத் தாண்டியவர்கள் என்று இரு பிரிவாக நடத்தப்பட்டது. பார்வையாளர்களிலும் சிலர் கலந்து கொண்டனர்.

12) வாயில் ஸ்பூஸ்னைப் பிடித்தபடி அதிலுள்ள எலுமிச்சை பழம் கீழேவிழாமல் ஓடும் போட்டியும் பார்க்க குதூகலமாக இருந்தது. எலுமிச்சை பழத்தை வைத்து இப்படியும் ஒரு போட்டியா? என்று பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்! ;)

13) அஸர் தொழுகை முடிந்து சிறார் சிறுமிகளுக்கான பிஸ்கட் கவ்வுதல் போட்டி ஆரவாரமாகத் தொடங்கியது.  நூலில் பிஸ்கெட்டைக் கட்டித்தொங்கவிட்டு குதித்து குதித்து வாயால் கவ்வும் போட்டி,பெற்றோர்கள் மட்டுமின்றி  பார்வையாளர்களுக்கும்கூட த்ரில்லிங்கை ஏற்படுத்தியது. சாதாரண நாட்களில் பிஸ்கெட் கொடுத்தால் திண்ணாத  குழந்தைகளும், போட்டிக்காக பிஸ்கெட்டைக் கவ்வுவதற்குக் குதித்தது சுவாரஸ்யமான அனுபவம்.

14) குழந்தைகளும்,ஆண்களும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கியதால்,தாய்மார்களுக்கும் போட்டி  ஆர்வம் தொற்றியது.இல்லத்தரசிகளும்,இளம்பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் ஊசியில் நூல் கோர்ப்பது  மற்றும் கைபையிலிருந்து போனை எடுத்து அறிவிக்கப்படும் நம்பருக்கு மிஸ்டுகால் (Missed Call) கொடுப்பது  ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

15) பல்வேறு போட்டிகள் நடந்தாலும் கலந்து கொள்ள விருப்பமின்றி இருந்தவர்களுக்காகவே கூடையில் பந்து  வீசும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று வயது முதல் 65+வயதுடையோரும் கலந்து கொள்ளலாம் என்பதால்  பேரர்களும்,வாப்பாமார்களும் தாத்தாக்களும் குறிதவறாமல் கூடையில் பந்து வீசுவதற்குப் போட்டி போட்டது  முழுக்க முழுக்க உற்சாகமான குடும்ப நிகழ்ச்சி என்பதை பறைசாட்டியது.

16)அனைத்து போட்டிகளுக்கும் ஒன்று-இரண்டு-மூன்று ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.முதலிரு இடங்களுக்கான  பரிசுகள் பொருட்களாகவும், மூன்றாம் பரிசாக துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கான குடும்ப அனுமதி (VIP PASS)   சகோ.F.இப்ராஹிம் வழங்கினார்.

17) சகோ.முஹம்மது ஹுசைன் ஆலிம் (உரிமையாளர்:திரியெம் டைப்பிங் சென்டர்) நான்கு அழகிய டின்னர் செட்  சிறப்புப் பரிசாக வழங்கினார். சகோ.ஜாஃபர் மரைக்கான் மற்றும் சிலரும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.

18) நிகழ்ழ்வில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட குடும்ப  சீட்டில் பெயர் எழுதிபோட்டு குலுக்கி எடுப்பது.முதல் பரிசாக அரை பவுன் 24காரட் தஙகக்காசு,இரண்டாம் பரிசாக  கால் பவுன் தங்கக்காசு+டின்னர்செட் & மூன்றாம் பரிசாக கால்பவுன் தங்கக்காசு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.  தங்கக்காசுகள் அனைத்தையும் அதிரை பெஸ்டிவல் நிறுவன உரிமையாளர் சகோ.ஏர்லிங் தமீம் வழங்கினார்.  போட்டிகளை ஒருங்கிணைத்த விளையாட்டுக் குழுவுக்கும் சிறப்பு பரிசுகள் வழஙப்பட்டன.எனக்குக் கிடைத்தது  டின்னர் செட்!

19) பரிசளிப்பு முடிந்தும் மஃரிப் தொழுகைக்குப் பிறகும் குழந்தைகள் போட்டிகளுக்குத் தயாராக இருந்ததோடு,  தாங்களாகவே மைக்கில் (என் கையிலிருக்கும் மெகாஃபோன்!) தெரிந்த குர்ஆன் ஆயத்துகளை ராகமிட்டு ஓதி  குரல்வளத்தைக் காட்டினர். இவர்களுடன் பார்வையாளர்களாக வந்திருந்த அரபுக் குழந்தைகளும் போட்டியிட்டு  கிராஅத் ஓதி சிறுசிறு பரிசுகளை வென்றனர்.

20) வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தும் சில குடும்பத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில்  விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால் ஒருசில குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை.

மொத்தத்தில் வெளிநாட்டில் வசிக்கும் அதிரையர்களின் குடும்பத்தினரில் ச.இ.ச மஹல்லாவாசிகளின் குடும்ப  சந்திப்பு அமீரகம் மட்டுமின்றி, அரபு வளைகுடா நாடுகளிலேயே புதுமையானதும் உற்சாகமானதும் என்றால்  மிகையில்லை.

தொகுப்பு: N.ஜமாலுதீன் (அதிரைக்காரன்)





Saturday, November 9, 2013

சம்சுல் இஸ்லாம் சங்கம், ஐக்கிய அரபு அமீரகம்(UAE)–FAMILY MEET


அஸ்ஸலாமு அலைக்கும். இன்று 08/011/2011 துபாய் முஷ்ரிப் பார்க்கில் நடந்த அமீரகம்வாழ் SIS முஹல்லாவாசிகளின் குளிர்கால குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. 55 குடும்பங்களிலிருந்து 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கான சுவாரஸ்யமான போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட்டு வெற்றிபெற்றோர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அமீரகத்தின் அபுதாபி, சார்ஜா, ராசல்கைமா மற்றும் துபாயின் பலபகுதிகளில் இருந்தும் குடும்பத்தினருடன் காலை 10 மணிமுதல் வரத்தொடங்கிய முஹல்லாவாசிகளுக்கு ஜும்மா தொழுகை முடிந்து உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு போட்டிகள் வயதுவாரியாக நடத்தப்பட்டன. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது அனைவரையும் கவர்ந்தது

 

நூற்றுக்கும் அதிகமான SIS முஹல்லாவாசிகள் குடும்பத்தினருடன் வசித்தபோதிலும் அமீரகத்தில் இதுபோன்ற குடும்ப சந்திப்பு நிகழ்வுகள் இதுவரை நடத்தப்பட்டதில்லை. இதுபோன்ற சந்திப்புகள் முஹல்லாவாசிகளிடையே புரிந்துணர்வு அதிகரிக்க உதவியாக இருப்பதாகவும், ஊரிலிருந்து உறவுகளைப் பிரிந்துவாழும் முஹல்லா வாசிகளுக்கு பொழுதுபோக்கு கலந்த ஆறுதலாகவும் இருந்ததாக பலரும் தெரிவித்தனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சீட்டு வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம் அதிரை ஃபெஸ்டிவல் Owner ஏர்லிங் தமீம் வழங்கினார். அதுபோல் இரண்டாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயத்துடன் டின்பர் செட்டும், மூன்றாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும் அதிரை ஃபெஸ்டிவல் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் மூன்று சிறப்பு பரிசுகளை திரியம் டைப்பிங்செண்டர் முஹம்மது ஹுசைன் ஆலிமும், மற்றொரு சிறப்பு பரிசை சகோ. ஜாஃபரு Marikan வழங்கினார்.

உணவு பரிமாற்ற ஏற்பாடுகளை சகோ.அப்துல் ஹக் (ETA ) ஏற்பாடு செய்திருந்தார். போட்டிகளை சகோ.N.ஜமாலுதீன், Z.அமீனுத்தீன், அப்துல் ஹக்ஹமீது சுல்தான்,F.Ibrahim ஆகியோர் அடங்கிய குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். போட்டிக்கான பரிசுகளை அபுதாபி அய்மான் அமைப்பு தலைவர். சகோ. ஷாகுல் ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

மேலதிக விபரங்களும் புகைப்படங்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவிடப்படும்.

 

Thursday, November 7, 2013

சம்சுல் இஸ்லாம் சங்கம், ஐக்கிய அரபு அமீரகம்(UAE)–FAMILY MEET அழைப்பிதழ்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம், அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ், நாளை 08-11-2013-வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிஃப் பார்க்- MUSHRIF PARK(Near:Mirdif)-ல் ஒன்று கூடல் (FAMILY MEET)-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇதனடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட நபர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் தங்கள் குடும்பத்துடன் சரியாக வெள்ளிக்கிழமை (08-11-2013) காலை 10 மணிக்குள் முஷ்ரிஃப் பார்க்(MUSHRIF PARK) வந்து சேரவும்.   


குறிப்பு: இதுவரை அழைப்பு வராத நபர்கள் யாரேனும் இருந்தால், தயவு செய்து சகோ.தமீம்(050-7480023) / சகோ.ஷபீக் அஹமது(056-1761234)- தொடர்பு கொண்டு தங்கள் குடும்பத்தினர் விபரத்தை முன்பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம்ஆ தொழுகை பார்க்கிலுள்ள ஜும் பள்ளியில் நடைபெறும்.மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
அஹமது அஸ்லம். (055-8219432)
தலைவர் 

சம்சுல் இஸ்லாம் சங்கம்(SIS),
அமீரகம்(UAE).

Tuesday, September 3, 2013

உயர் கல்விக்கு வசதியில்லாதோருக்கு உதவி - ஆஸ்திரேலியா சம்சுல் இஸ்லாம் சங்கம் தீர்மானம்!


அஸ்ஸலாமு அலைக்கும் 

ஆஸ்திரேலியா சிட்னியில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லா கூட்டம், சகோதரர் பஷீர் அவர்கள் வீட்டில் சகோ. மீராசாஹிப் அவர்கள் தலைமையில் நடத்தப் பட்டது.  கூட்டத்தில் சம்சுல் இஸ்லாம் சங்க சிட்னி அதிரை சகோதரகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவது என்று முக்கிய அஜெண்டாவாக எடுத்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது..

இந்த நிலையில் கல்வி உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் யார்? எந்த அடிப்படையில் வழங்குவது? உள்ளிட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர் பார்க்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், கல்வி ஆர்வலர்கள் இதில் தகுந்த ஆலோசனைகளை வழங்குவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

 உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு sismaadirai@gmail.com என்ற ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியில் வெளி நாட்டில் வாழும் சகோதரர்களும் பங்கேற்க விரும்பினால் மேற்கண்ட ஈ மெயிலுக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: மீராசாஹிப்
சிட்னி, ஆஸ்திரேலியா.
 sismaadirai@gmail.com 

Saturday, February 2, 2013

மரண அறிவிப்பு



மர்ஹீம் மு.செ.சி.அப்துல் காதர் அவர்களின் மகனும், அஹமது அஸ்லம்(தலைவர், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்-துபை கிளை) அவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது, ஷாஃபி, சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜா நஜ்முதீன், அமீருல் அப்பாஸ் ஆகியோரின் மாமனாருமான அஹமது அன்சாரி அவர்கள் இன்று மாலை 8:00 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

அன்னாரின் ஜனாசா நாளை காலை 09:30 மணிக்கு மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

Monday, January 14, 2013

துபாயில் ஓர் குளுகுளு உதயம்!

இன்று (14-01-2013) மாலை 4:00 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மாநகரில் peach 'n' berry என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது. 
பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள peach 'n' berry ஐஸ் கிரீம் 
பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை 
வழங்கப்படும் என்று உரிமையாளர் ஜனாப். அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.
அதிரை சகோதரரின் இந்த நிறுவனத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு வழங்கும்படி அதிரை அனைத்து முஹல்லா துபாய் கிளை தலைவர் சகோ.தமீம் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
செய்தி & புகைப்படம்: இப்ராஹிம். 

Sunday, January 13, 2013

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டம் !

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]

கடந்த [ 11-01-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டத்திற்கு  AAMF’ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி, பெரிய ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் கமிட்டியின் நிர்வாகிகள் MMS. தாஜுதீன், VM. அப்துல் மஜீது, KSM. பகுருதீன், PMK. தாஜுதீன் ஆகியருடன் முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  ஜமீல் M. ஸாலிஹ், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அக்பர் ஹாஜியார் மற்றும் KSA. அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.



ஆண்டறிக்கையின் சிறப்பு அம்சங்கள் :
 
1) 18 பக்கங்களைக் கொண்ட AAMF’ன் ஆண்டறிக்கையை வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு விருந்தினர்களாக கூட்டத்தில் கலந்துகொண்ட பலரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.



 


2) AAMF’ன் சார்பாக இதுவரையில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், அவசரக் கூட்டங்கள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டவை மற்றும் செயல்படுத்தப்படக் கூடியவை ஆகியன தொடர்பாக உள்ள தகவல்கள் இடம்பெற்றன.


 

3) மேலும் AAMF’ன் சார்பாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், நிதி உதவிகள் ஆகியன தொடர்பான தகவல்களும் இடம்பெற்றன.
4) இந்தக் கூட்டத்தில் முதன் முறையாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி அவர்கள் தனது சிறப்புரையில் “மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் ஊர் பொதுமக்களின் பங்களிப்புகள் என்ன ? என்பது பற்றியும் மேலும் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுடன் அவர்களின் ஒத்துழைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?” என்பது குறித்தும் பேசினார்.
5)‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது அவர்களின் மேற்பார்வையுடன், சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் பங்களிப்புடன், ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ் அவர்களால் தயாரிக்கப்பட்ட AAMF’ன் திருத்தத்திற்குரிய சட்ட வரைவு அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அழித்தல் / திருத்துதல் / சேர்த்தல் ஆகியன இருந்தால், அவற்றை ஒரு வார கால அவகாசத்திற்குள் தெரியப்படுத்த அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
6) அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அமீரக கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட AAMF’ன் 2013 ஆம் ஆண்டிற்கான காலண்டர்கள் இலவசமாக விநியோகிகப்பட்டது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டன.
 



7) AAMF’ன் சார்பாக இனிவரும் கூட்டங்களை நமதூர் ஜாவியா பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு மஹல்லா சார்பாக நடத்தப்பட வேண்டும்’ என்று AAMF’ன் துணைச்செயலாளர் A. முஹம்மது முகைதீன் அவர்களால் வைக்கப்பட்ட வேண்டுகோளை எடுத்துக்கொண்டு விவாதம் செய்யப்பட்டன. இறுதியில் AAMF’ன் சார்பாக நடைபெற உள்ள சிறப்பு மற்றும் அவசரக்கூட்டங்களை ஜாவியா பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்றும், இதற்காக AAMF’ன் சார்பாக ஜாவியா நிர்வாகத்தினரை முறையாக அணுகி அனுமதி கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


8. AAMF’ன் வரவு-செலவு கணக்கு விவரங்கள் அனைத்தும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

9. AAMF’க்கு செலுத்த வேண்டிய மஹல்லா ஆண்டுச் சந்தா ரூபாய் 1000/- மற்றும் உறுப்பினர்களின் ஆண்டுச்சந்தா ரூபாய் 100/- ஆகிய தொகைகளை AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் செலுத்தும்படி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
 

10. கூட்டத்தின் நிகழ்ச்சிகள் மஹரீப் தொழுகைக்கு பின்பும் தொடர்ந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

11. நன்றியுரை : சகோ. B. ஜமாலுதீன் அவர்கள்.

12. AAMF’ன் முதல் ஆண்டு வெற்றிகரமாக முடிவுற்று, AAMF’ன் இரண்டாம் ஆண்டின் துவக்கக் கூட்டதை தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பாக அதன் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்துருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :
 
‘கிராம பஞ்சாயத்தார்களோடு சந்திப்பது தொடர்பாக’ தேதி மற்றும் இடம் முடிவு செய்வது குறித்து போதிய கால அவகாசம் இல்லாததால் இக்கூட்டதில் அவற்றை எடுத்துக்கொண்டு பேச இயலவில்லை. இதற்காக வருகின்ற 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4. 30 மணியளவில் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவன் நாடினால் ! விரைவில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர் - AAMF
அதிரை

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)