Ads 468x150px

Labels

Sunday, September 13, 2015

அதிராம்பட்டினம் மரணஅறிவிப்பு

துபாய் நூர் இல்லம் ஸ்டேசனரி மேலாண்மை இயக்குநர் நமதூர்
அல்ஹாஜ் ஷேக் தாவூத் ( வயது 65 )
அவர்கள் இன்று 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இறைவனிடி சேர்ந்தார்கள்.

இன்னாலில்லாஹி  இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா நாளை 14.09.2015 திங்கட்கிழமை துபாயில்  மஃக்ரிப்புக்க பிறகு அல்குஸ் சேக் ஜாயித் ரோடு ஓயசிஸ் பின்புறம் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றனசம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா வாசிகள் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும்.
தொடர்புக்கு : இஸ்லாமுதீன் : 050 20 49 217

Wednesday, August 19, 2015

சம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாளராக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் போட்டியின்றி தேர்வு !


சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று [ 19-08-2015 ] காலை சங்க அலுவகலத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். சங்க துணை செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது, பொருளாளர் ஆடிட்டர் ஹாஜி அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் சங்க நிர்வாகத்தில் காலியாக உள்ள செயலாளர் பொறுப்புக்கு புதிய நிர்வாகி தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் மஹல்லாவாசியும், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வருமாகிய பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள், சங்கத்தின் செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தாம் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கல்லுக்கொல்லை)
 

நன்றி

Friday, July 24, 2015

அமீரகத்தில் ஓதப்படும் ஜும்மா உரை 24-07-15

கலவர சிந்தனையும் காழ்புணர்ச்சியும்!

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏறத்தாழ அமீரகத்தில் AWQAF கட்டுப்பாட்டில் உள்ள 5000 பள்ளிவாசல்களில் நடத்தப்படும் ஜும் ஆ உரையின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது..தொழுகைக்கு செல்லும் முன் படித்து விட்டுச் சென்றால் இமாம் பேசுவதை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
இதனுடைய மொழிபெயர்ப்பை சில நாட்களுக்கு பின்  Awqaf வெப்சைட்டில் வெளியாகும் ஆங்கில பதிப்போடு சரிபார்த்துக் கொள்ளவும்.
.

எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:39)

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை  அஞ்சுங்கள்! அல்லாஹ் வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

ஜஸாக்கல்லாஹூ கைர்..













Wednesday, June 17, 2015

இந்தியாவில் தடை செய்யப்பட்ட 400 தயாரிப்புகள்..பெரும்பாலானவை விற்பனையில்..பகீர் ரிப்போர்ட்.

டெல்லி: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் மேகி மட்டும் தடை செய்யப்பட்டவில்லை. பிரபல பெரும் நிறுவனங்களின் தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.























Wednesday, June 10, 2015

சம்சுல் இஸ்லாம் சங்க புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது ஒத்திவைப்பு ! பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !

சம்சுல் இஸ்லாம் சங்க புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது ஒத்திவைப்பு ! பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சங்க அலுவலத்தில் நடைபெற்றது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். ஏனைய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சங்க கட்டிடம் விரிவாக்கப் பணி குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்த ஹாஜி முஹம்மது சேக்காதியார்அவர்கள் ராஜினாமாவை அடுத்து புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வருகை போதுமானதாக இல்லை என்பதால் புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது எதிர்வரும் ஜூலை 20 தேதி கூட்டம் நடத்தி தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இணைச்செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் நடப்பாண்டின் ஆண்டரிக்கை எடுத்துரைத்தார்.

இன்றைய கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 
 
 

Thank 
Adirai News

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)