Ads 468x150px

Labels

Sunday, May 31, 2015

சோற்றுக்கற்றாழை :

சோற்றுக்கற்றாழையின் பயன்களோ ஏராளாம். இதனை வளர்ப்பதோ மிகவும் எளிது. அதிகமாக தண்ணீர் தேவைப்படாது. காற்றில் உள்ள நீரையே உறிஞ்சிக்கொள்ளும் தன்மையுடையது.

வீட்டில் தொட்டிகளிலேயே வைத்து வளர்க்கலாம். எந்த‌ முகப்பூச்சு, உடல்பூச்சு சாதனங்களில் பார்த்தாலும் ஆலுவேரா சேர்த்துள்ளதுனுதான் விளம்பரமே பண்றாங்க‌.

இப்பலாம் சில‌ பழமுதிர்நிலையங்களில் ஒரு இதழ் 5, முதல் 10 ரூபாய் வரை விற்கிறாங்க‌. இந்த‌ இதழ்பகுதியை கத்தியால் மேல்பகுதியை கீறிவிட்டு உள்ளே வெந்தயத்தை வைத்து இரவுமுழ்வதும் ஊறவிட்டு காலையில் எடுத்து அதனை அரைத்து தலைக்கு தேய்த்தால் இளநரை கட்டுப்படும், முடியும் கருப்பாக‌ செழித்து வளருமாமே!!


தினமும் இதன் உள்ளிருக்கும் சோறுனு சொல்வாங்க‌ அதை, அதாவது மேலிருக்கும் பச்சை பகுதியை நீக்கினால் கிடைக்கும். அதனை உண்டு வந்தால் அலசர் கட்டுப்படும். அதுவும் இல்லாம‌ குடலிலுள்ள‌ பூச்சிகள் அழிக்கபடும்.

தலைக்கு பூசும் பொழுது முடியானது மிகவும் மென்மையா இருக்கு. நாங்க‌ பயன்படுத்துகிறோம், அதனால‌ சொல்றேன். ஹேர்கன்டிஷனர் தேவையே இல்லை.

அவ்வப்பொழுது சாப்பிடுவதும் உண்டு. கசப்பு தன்மையானது மேலே உள்ள‌ தோலுக்கு மட்டுமே உண்டு.
மற்றபடி இதற்கென‌ தனிசுவை இல்லை. ஆனால் மிகவும் வழவழப்பாக‌ இருப்பதால் உண்பதற்கு பிடிப்பதில்லை. அதுனால தினமும் சாப்பிடமுடிவதில்லை.

ஆனால் ஜூஸாக‌ மிக்ஸியில் போட்டு அடிக்கும் பட்சத்தில் அருந்துவது எளிதாக‌ இருக்கின்றது.

Monday, May 11, 2015

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் லண்டன் கிளை நடத்தும் விருது வழங்கும் விழா!

                                       ஷம்சுல் இஸ்லாம் சங்கம்- லண்டன் கிளை 
              
   அன்புடையிர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் 

வரும் 16.05.2015 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் லண்டன் கிளையின் சார்பாக நம் அதிராம்பட்டினம் நகருக்குள் அமைந்துள்ள மேல் நிலைப்பள்ளிகளுக்குள் முதல்மூன்று இடங்களைப் பெற்று அரசுத்தேர்வில் வெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசளித்துப் பாராட்டி அவர்களை மேல்நிலைப் பட்டப்படிப்புகளுக்கு ஆர்வம் பெறச் செய்வதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அத்துடன் நமதூரில் ஊடகச் சேவைபுரிந்து வரும் ஊடகத்துறை நண்பர்களுக்குப் பாராட்டும், நமதூரின் மத்ரஸாக்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் ஊரின் கண்ணியமிக்க பெரியோர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிகள் ஆண்களுக்கு செக்கடிப்பள்ளி வளாகத்திலும் பெண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாங்கள் அனைவரும் தவறாது இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

                           இப்படிக்கு 
              ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
                     லண்டன் கிளை

நன்றி
அதிரை பிறை

Friday, May 8, 2015

அமிரகத்தில் ஓதப்படும் ஜும்மா உரை 08-05-15

                     அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
                              அஸ்ஸலாமு அலைக்கும்,


தலைப்பு : பிறருக்கு நன்மை செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்!

ஏறத்தாழ அமீரகத்தில் AWQAF கட்டுப்பாட்டில் உள்ள 5000 பள்ளிவாசல்களில் நடத்தப்படும் ஜும் ஆ உரையின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது..தொழுகைக்கு செல்லும் முன் படித்து விட்டுச் சென்றால் இமாம் பேசுவதை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த மொழிபெயர்ப்பை சில நாட்களுக்கு பின்  Awqaf வெப்சைட்டில் வெளியாகும் ஆங்கில பதிப்போடு சரிபார்த்துக் கொள்ளவும்.
எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:39)

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை  அஞ்சுங்கள்! அல்லாஹ் வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.











இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)