Ads 468x150px

Labels

Sunday, May 31, 2015

சோற்றுக்கற்றாழை :

சோற்றுக்கற்றாழையின் பயன்களோ ஏராளாம். இதனை வளர்ப்பதோ மிகவும் எளிது. அதிகமாக தண்ணீர் தேவைப்படாது. காற்றில் உள்ள நீரையே உறிஞ்சிக்கொள்ளும் தன்மையுடையது.

வீட்டில் தொட்டிகளிலேயே வைத்து வளர்க்கலாம். எந்த‌ முகப்பூச்சு, உடல்பூச்சு சாதனங்களில் பார்த்தாலும் ஆலுவேரா சேர்த்துள்ளதுனுதான் விளம்பரமே பண்றாங்க‌.

இப்பலாம் சில‌ பழமுதிர்நிலையங்களில் ஒரு இதழ் 5, முதல் 10 ரூபாய் வரை விற்கிறாங்க‌. இந்த‌ இதழ்பகுதியை கத்தியால் மேல்பகுதியை கீறிவிட்டு உள்ளே வெந்தயத்தை வைத்து இரவுமுழ்வதும் ஊறவிட்டு காலையில் எடுத்து அதனை அரைத்து தலைக்கு தேய்த்தால் இளநரை கட்டுப்படும், முடியும் கருப்பாக‌ செழித்து வளருமாமே!!


தினமும் இதன் உள்ளிருக்கும் சோறுனு சொல்வாங்க‌ அதை, அதாவது மேலிருக்கும் பச்சை பகுதியை நீக்கினால் கிடைக்கும். அதனை உண்டு வந்தால் அலசர் கட்டுப்படும். அதுவும் இல்லாம‌ குடலிலுள்ள‌ பூச்சிகள் அழிக்கபடும்.

தலைக்கு பூசும் பொழுது முடியானது மிகவும் மென்மையா இருக்கு. நாங்க‌ பயன்படுத்துகிறோம், அதனால‌ சொல்றேன். ஹேர்கன்டிஷனர் தேவையே இல்லை.

அவ்வப்பொழுது சாப்பிடுவதும் உண்டு. கசப்பு தன்மையானது மேலே உள்ள‌ தோலுக்கு மட்டுமே உண்டு.
மற்றபடி இதற்கென‌ தனிசுவை இல்லை. ஆனால் மிகவும் வழவழப்பாக‌ இருப்பதால் உண்பதற்கு பிடிப்பதில்லை. அதுனால தினமும் சாப்பிடமுடிவதில்லை.

ஆனால் ஜூஸாக‌ மிக்ஸியில் போட்டு அடிக்கும் பட்சத்தில் அருந்துவது எளிதாக‌ இருக்கின்றது.

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)