Ads 468x150px

Labels

Sunday, November 24, 2019

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற மக்தப் பேராசிரியர்கள் உலமாக்கள் கூட்டம்!

நவ : 24.19

அதிராம்பட்டினம் ஜோன் க்கு உட்பட்ட ஊர்களின் மக்தப் பேராசிரியர்கள் உலமாக்களின் கூட்டம்

இன்று காலை 9.30 மணிக்கு மிக சிறப்பான முறையில் துவங்கி

மதியம் 2.15 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது.

முதலில்
கிராத் : பேராசிரியர் மௌலானா அஹ்மது அனஸ் அவர்கள்.

ஒழுக்கங்கள் : அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் சுருக்கமான முறையில் தெரிவித்தார்கள்.

பிள்ளைகளுக்கு எவ்வாறு மார்க்க கல்வியை போதிக்க வேண்டும்.

மக்தப் பள்ளியில் தஜ்வீதுடன் ஓதும் பிள்ளைகளின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் சுருக்கமாக தெரிவித்தார்கள்.

அதற்கு அடுத்து
அதன் நோக்கங்கள் : பற்றி விரிவாக பேசப்பட்டது.

அதற்கு அடுத்து :
நாம் சரியான முறையில்
அல்குர் ஆணை உச்சரிப்புடன் ஓது கின்றோமா என்பதை பல உதாரணங்களை சொல்லி சொல்லப்பட்டது.

நம்முடைய அழகான பெயர்களை கூட நாம் எவ்வாறு கூப்பிடுகின்றோம்
என்பதை அருமையான முறையில் சொல்லி காண்பிக்க பட்டது.

அல்லாஹுடைய கலாமை சரியாக சொல்ல வில்லை என்றால் அதன் அர்த்தங்கள் மாறி விடுவதையும் சொன்ன விதம் அருமை.

அதேபோல்
அல்குர் ஆணை சில வாக்கியங்களை சொல்லி அதற்கு அடுத்து என்ன என்று

வந்து இருந்த உலமாக்களை பார்த்து கேட்டதும்
அதற்கு உடனே உலமாக்களும் அடுத்த அடுத்த வாக்கியங்களை சொன்னது
அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது
மாஷா அல்லாஹ்.

மக்தப் பற்றி விரிவாக பல உலமாக்கள் பேசினார்கள்.

இறுதியில் துவாவுடன் இந்த அமர்வு நிறைவு பெற்றது.

அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

காலை உணவும் ,
மத்திய உணவும்

செக்கடி பள்ளியில்
ஆண்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெண்களுக்கு சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த அமர்வுக்கு 200க்கும் அதிகமானோர் ஆண்களும் , பெண்களும்
கலந்து கொண்டது
குறிப்பிடத்தக்கது.

சங்கத்தில் ஆண்களுக்கு ஒரு பகுதியும் , பெண்களுக்கு ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டது.

அல்லாஹுடைய கலாமை பற்றி சொல்லி கொண்டு இருக்கும் போது

அல்லாஹுடைய ரஹ்மத் அருள் மழை
காலையில் இருந்தே
விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருந்தது கூடுதல் சிறப்பு.

அத்துடன்
சங்கம்CMP புதுமனை இளைஞர்கள் இந்த நிகழ்வுக்கு சிறப்பாக பணி செய்தார்கள்
குறிப்பிடத்தக்கது.

நம்முடைய பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளை மக்தப் மதரஸா வில் சேர்ப்போம்.

இன்ஷா அல்லாஹ்

ஒவ்வொரு வீட்டிலும்
ஹாபில் மற்றும் உலமாக்கள் , ஆலிம்கள் , ஆலிமாக்களை உருவாக்குவோம்.

நமது முஹல்லாவை
மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

உலக கல்வியிலும்
சிறந்து விளக்குவோம்.

நமது ஊரிலும் அதிகமான உலமாக்கள் மற்றும் ஆலிம்களை உருவாக்குவோம்.

நுற்றாண்டு விழா விற்கு முன்பாக

நமது சங்கத்திற்கு முதல் நிகழ்வாக

அல்லாஹுடைய கலாமை பற்றிய அமர்வு.
மறக்க முடியாத இந்த நிகழ்வு.

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)