Ads 468x150px

Labels

Sunday, December 24, 2017

அதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் தொகை வசூலிப்பு ~ நிறுவன உரிமையாளர் கவனத்துக்கு எடுத்துச் சென்றது சம்சுல் இஸ்லாம் சங்கம்! (SISYA)



தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் இயங்கும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காஸ் பதிவு செய்த சில நாட்களில் காஸ் நிறுவன ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிலிண்டருக்கு பில் தொகையை வீட கூடுதல் தொகை  வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில்  புகார் எழுந்தது.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க (SISYA) நிர்வாகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அதன் பிரதிநிதிகள், அந்நிறுவன உரிமையாளர் பாலு அவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து நுகர்வோரின் புகாரை தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்சுல் இஸ்லாம் சங்க பிரதிநிதிகள் கூறியது; 
பாலு இன்டேன் காஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. நுகர்வோர் பில் தொகைக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. பில் தொகை மட்டும் வழங்கினால் போதுமானது என காஸ் நிறுவன உரிமையாளர் பாலு கூறியதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர்.


Thanks to Adirai News

Sent from my iPhone

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)