Ads 468x150px

Labels

Thursday, November 30, 2017

அதிரை பேரூராட்சியில் 2 அம்ச கோரிக்கை மனுக்களை வழங்கிய சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர்!

கோரிக்கை 1:

அதிரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் 10 லட்சம் லிட்டர் மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகளின் முக்கிய நீர் ஆதாரமாக காட்டுக்குளம், ஆலடிக்குளம், செக்கடிக்குளம் ஆகியவை இருந்து வருகின்றன. இந்த நிலையில்  கடந்த சில ஆண்டுகளாக இந்த குளங்கள் முழுமையாக நிரம்பாததன் காரணமாக போர்வெல்லில் நீர்மட்டம் குறைந்துள்ளதுடன் நிலத்தடி நீரும் தொடர்ந்து கீழ் சென்று வருகின்றது. இதையடுத்து காசரா ஏரியில் உள்ள நீரேற்று பம்பிங் லைன் மூலம் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை நிர்வாக அதிகாரியிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை மனுவை வழங்கினர். 

கோரிக்கை 2:

அதே போன்று இமாம் ஷாபி பள்ளி மற்றும் இஜாபா பள்ளி அருகாமையில் உள்ள மழை நீர் வடிகாலில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் சேர்வதால் அந்த பகுதிகள் துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த மழை நீர் வடிகாலை பேரூராட்சி சுத்தம் செய்து தர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு வழங்கி கோரிக்கை விடுத்தனர். இந்த மனுக்களை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ் உள்ளிட்ட சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.


Sent from my iPhone

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)