Ads 468x150px

Labels

Wednesday, November 29, 2017

அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க ஒன்று கூடல் (Get together) பரிசுகள் விபரம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை, டிசம்பர்-2, 2017 ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை சார்பில் துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் (Mushrif Park) நடைபெற இருக்கும் ஒன்று கூடல் (Get together) நிகழ்வில் அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற இருப்பதை அறிவித்திருந்தோம். அவற்றில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கக்காசு (Gold Coins) பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபட உள்ளன.

அவற்றின் விபரம் வருமாறு:

முதல் பரிசு: Gold Coin, ஒரு பவுன் (ஒருவருக்கு)

இரண்டாம் பரிசு - Gold Coin, முக்கால் பவுன் (ஒருவருக்கு)

மூன்றாம் பரிசு - Gold Coin, அரை பவுன் (ஒருவருக்கு).

ஆறுதல் பரிசு - Gold Coin, கால் பவுன் (ஒருவருக்கு)

இவைகள் தவிர நவம்பர் 30 மற்றும் டிசம்பர்-1 துபாய் அல் மனார் செண்டரில் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடை சொல்லும் ஒருவருக்கு கால் பவுன் தங்கக்காசு(Gold Coin) சிறப்புப் பரிசாக வழங்கப்படும்.

ஆகவே, சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவாசிகள் காலம் தாழ்த்தாமல் காலை 9-மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் முஷ்ரிஃப் பூங்காவிற்க்கு (Mushrif Park) வருகை தந்து நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

1) வாகன வசதி இல்லாத நமது சங்க மஹல்லா பேச்சிலர்களுக்கு (Bachelors) மட்டும் துபாய் தேரா-வெஸ்ட் ஹோட்டல் அருகிலிருந்து வாகன வசதி செய்யத் திட்டமி்ட்டுள்ளதால் நாளைக்குள் (30-11-2017 வியாழன் இரவு 8:00 மணிக்குள்) முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என்பதால் கிளை நிர்வாகிகளிடம் அதை உறுதி செய்துகொள்ளவும்.

2) அமீரகத்தில் விசிட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், நமது ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக வெளிநாடு மற்றும் தாயகத்திலிருந்து வந்திருப்பவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவையுள்ளோர் துபாய் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

இவண்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை
Sent from my iPhone

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)