மர்ஹூம் அஹமது தம்பி அவர்களின் மகனும், 'மாப்பிள்ளை' எஸ். ஏ. எம் ஷம்சுதீன் ,எஸ். ஏ. எம் பாரூக் ஆகியோரது சகோதரரும், J.ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாரும், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் அவர்கள் நேற்றிரவு (18-12-2010) சனிக்கிழமை வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:அதிரை அஹ்மது
Sunday, December 19, 2010
Monday, November 22, 2010
கல்யாணமாம் கல்யாணம்!
"Marriages are made in Heaven" (திருமணங்கள் சொர்க்கத்தில் நடத்தப்படுகின்றன) என்றொரு பழமொழியுண்டு. சொர்க்கத்தில் நடத்தப்படுகின்றனவோ என்னவோ, அவற்றுள் பெரும்பாலானவை சோகத்தில் முடிகின்றன – முறையாக நடத்தப்படாததால்!
மோதல்கள், பிரச்சினைகள், வழக்குகள், சமரச முயற்சிகள், இன்னும் சொல்லப் போனால் கட்டப் பஞ்சாயத்துகள், - இப்படி, துயரத் தொடர்கதைகளாகப் பலரின் வாழ்க்கைகள் கேள்விக் குறியாகவே இருப்பதை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் பார்க்கிறோம்; கேட்கிறோம்.
இது பற்றிய சிந்தனையில் இருந்தபோது, பல திருமண நிகழ்வுகள், அவை நடத்தி வைக்கப்படும் முறைகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன; சிந்திக்கவும் வைக்கின்றன.
நாகூர்க் கல்யாணம்: திடீரென்று கேள்விப்படுகிறோம், பையன் இன்னாருக்கும் இன்ன பெண்ணுக்கும் கல்யாணம் முடிந்துவிட்டதாம் என்று! எப்படி? எங்கே? இந்தக் கேள்விகளுக்கு விடை: "நாகூர்க் கல்யாணம்!" நாகூரில் இருக்கும் 'சாபுமார்கள்' ஒவ்வொருவரும் தன்னிடம் ஒரு கல்யாணப் புத்தகம் வைத்திருக்கிறாராம். அவ்வூருக்குப் புதிதாக அல்லது ஊர்க்காரரரின் பரிந்துரையோடு வருவோரைச் சூழ்ந்துகொண்டு, அவர்களின் 'நாட்டங்களை' நிறைவேற்றி வைக்கின்றார்களாம்! அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட தொகை கை மாறியவுடன், 'அல்பாத்திஹா' சொல்லப்பட்டு, அங்கேயே திருமணச் சான்றிதழ் வழங்கப்படுகின்றதாம்! இதுபற்றி, இன்னும் கதை கதையாகத் தகவல்கள் நாள்தோறும் வருகின்றன.
மதுரை பாவா: மதுரைப் பகுதியில் இப்படி ஒருவர் பிரபலமானவர். இவருக்குத் 'தொழிலே' திருமணம் செய்துவைப்பதுதான். அதற்காக லட்டர்பேடு, ரப்பர் ஸ்டாம்பு, பதிவுப் புத்தகம், சர்ட்டிபிகேட் சகிதம் ஓர் ஆணையாளர் போல் அமர்ந்து, தன்னை நாடி வரும் ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பாராம். சாட்சிகள்? அதெல்லாம் பேசக் கூடாது! இருந்தால் சரி; இல்லாவிட்டால், அவர்தான் எல்லாமும்! இதைத் தட்டிக் கேட்க யாருக்கும் நேரமில்லை; நெஞ்சமில்லை! அது பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் நடந்துவிடும். என்னிடம் இதுபற்றிக் கூறிய மதுரை நண்பரிடம், "நம் சமுதாய அமைப்புகள் இந்த அநியாயத்தை அடக்கக் கூடாதா?" என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்:
"அவருக்குப் பின்னால் ஒரு கூலிப் படையே இருக்கு சார்! அவர்களுக்கெல்லாம் தீனி போட்டுத்தான் இவருடைய 'சாம்ராஜ்யம்' சரியாக நடந்து வருகிறது!"
தான்தோன்றிக் கல்யாணம்: பெற்றோரும் குடும்பத்தவரும் சேர்ந்து செய்துவைத்தும், 'எப்படியோ' அந்தத் திருமணத்தின் மூலம் குழந்தை பெற்றும், திடீரென்று இன்னொருவனோடு ஓடிப்போய், எங்கோ 'காழி' ஒருவரைத் தேடித் பிடித்து, அவ்விருவரும் 'கல்யாணம்' செய்துகொள்ளும் 'தான்தோன்றிக் கல்யானங்களும்' நடக்கத்தான் செய்கின்றன! உறவில் சம்மந்தப்பட்டவர்கள் தேடித் பிடித்துவந்து கேட்டால், "தலாக் சொல்லிவிட்டோம்; மறு நிக்காஹ் செய்துகொண்டோம்" என்று எதிர்வாதம் பேசும் 'தான்தோன்றித் தம்பதிகளை'யும் பார்க்கத்தான் செய்கின்றோம்! சுருக்கமாகச் சொல்லப்போனால், இவர்கள், 'ஓடிப் போனவர்கள்'! இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் என்ன தண்டனை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் நடப்பதென்ன? இங்கு 'ஆபத் பாந்தவர்களாக' வந்து சேர்கிறார்கள் 'கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள்' தம் வயிற்றையும் பாக்கெட்டையும் நிரப்புவதற்கு! இதற்குப் பிறகும், அந்தத் திருமணத்தில் 'வலிமா' விருந்து நடக்கிறது; 'உரோஷமில்லா ஊரார்' பிரியாணி சமைத்துச் சாப்பிடும் கொடுமையும் நடக்கிறது!
இப்படி எல்லாம் முறையற்ற 'வாழ்க்கை ஒப்பந்தங்கள்' சமூகத்தில் நடப்பதாலோ என்னவோ, அரசாங்கமும் தன் பிடியை இறுக்கிப் பிடித்து, 'கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்' என்ற ஒன்றை நம் மீது தினித்துள்ளதோ என்னவோ!
முறைகேடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், பல ஊர்களில் பள்ளிவாயில்களை ஒட்டி, சங்கங்களும் சபைகளும் செயல்படுகின்றன. அது போன்றுதான், நம்மூரிலும் சில ஜமாஅத்துகள் திருமணப் பதிவேடுகளை வைத்து முறையாகச் செயல்பட்டு வருகின்றன. தகுதி வாய்ந்த நிர்வாகிகளால் நடத்தப்படும் சங்கங்கள் தரமான சேவைகளைச் செய்யக் காத்திருக்கின்றன.
இந்த அடிப்படையில் செயல்படத் தொடங்கி, நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பல பிரச்சினைகளைச் சுமுகமாகவும் அமைதியாகவும் தீர்த்து வைத்துள்ளது. எனவே, சங்கத்தை வலுப்படுத்துவோம்! சமாதானத்தை நிலைநாட்டுவோம்!
மோதல்கள், பிரச்சினைகள், வழக்குகள், சமரச முயற்சிகள், இன்னும் சொல்லப் போனால் கட்டப் பஞ்சாயத்துகள், - இப்படி, துயரத் தொடர்கதைகளாகப் பலரின் வாழ்க்கைகள் கேள்விக் குறியாகவே இருப்பதை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் பார்க்கிறோம்; கேட்கிறோம்.
இது பற்றிய சிந்தனையில் இருந்தபோது, பல திருமண நிகழ்வுகள், அவை நடத்தி வைக்கப்படும் முறைகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன; சிந்திக்கவும் வைக்கின்றன.
மதுரை பாவா: மதுரைப் பகுதியில் இப்படி ஒருவர் பிரபலமானவர். இவருக்குத் 'தொழிலே' திருமணம் செய்துவைப்பதுதான். அதற்காக லட்டர்பேடு, ரப்பர் ஸ்டாம்பு, பதிவுப் புத்தகம், சர்ட்டிபிகேட் சகிதம் ஓர் ஆணையாளர் போல் அமர்ந்து, தன்னை நாடி வரும் ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பாராம். சாட்சிகள்? அதெல்லாம் பேசக் கூடாது! இருந்தால் சரி; இல்லாவிட்டால், அவர்தான் எல்லாமும்! இதைத் தட்டிக் கேட்க யாருக்கும் நேரமில்லை; நெஞ்சமில்லை! அது பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் நடந்துவிடும். என்னிடம் இதுபற்றிக் கூறிய மதுரை நண்பரிடம், "நம் சமுதாய அமைப்புகள் இந்த அநியாயத்தை அடக்கக் கூடாதா?" என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்:
"அவருக்குப் பின்னால் ஒரு கூலிப் படையே இருக்கு சார்! அவர்களுக்கெல்லாம் தீனி போட்டுத்தான் இவருடைய 'சாம்ராஜ்யம்' சரியாக நடந்து வருகிறது!"
தான்தோன்றிக் கல்யாணம்: பெற்றோரும் குடும்பத்தவரும் சேர்ந்து செய்துவைத்தும், 'எப்படியோ' அந்தத் திருமணத்தின் மூலம் குழந்தை பெற்றும், திடீரென்று இன்னொருவனோடு ஓடிப்போய், எங்கோ 'காழி' ஒருவரைத் தேடித் பிடித்து, அவ்விருவரும் 'கல்யாணம்' செய்துகொள்ளும் 'தான்தோன்றிக் கல்யானங்களும்' நடக்கத்தான் செய்கின்றன! உறவில் சம்மந்தப்பட்டவர்கள் தேடித் பிடித்துவந்து கேட்டால், "தலாக் சொல்லிவிட்டோம்; மறு நிக்காஹ் செய்துகொண்டோம்" என்று எதிர்வாதம் பேசும் 'தான்தோன்றித் தம்பதிகளை'யும் பார்க்கத்தான் செய்கின்றோம்! சுருக்கமாகச் சொல்லப்போனால், இவர்கள், 'ஓடிப் போனவர்கள்'! இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் என்ன தண்டனை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் நடப்பதென்ன? இங்கு 'ஆபத் பாந்தவர்களாக' வந்து சேர்கிறார்கள் 'கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள்' தம் வயிற்றையும் பாக்கெட்டையும் நிரப்புவதற்கு! இதற்குப் பிறகும், அந்தத் திருமணத்தில் 'வலிமா' விருந்து நடக்கிறது; 'உரோஷமில்லா ஊரார்' பிரியாணி சமைத்துச் சாப்பிடும் கொடுமையும் நடக்கிறது!
இப்படி எல்லாம் முறையற்ற 'வாழ்க்கை ஒப்பந்தங்கள்' சமூகத்தில் நடப்பதாலோ என்னவோ, அரசாங்கமும் தன் பிடியை இறுக்கிப் பிடித்து, 'கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்' என்ற ஒன்றை நம் மீது தினித்துள்ளதோ என்னவோ!
முறைகேடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், பல ஊர்களில் பள்ளிவாயில்களை ஒட்டி, சங்கங்களும் சபைகளும் செயல்படுகின்றன. அது போன்றுதான், நம்மூரிலும் சில ஜமாஅத்துகள் திருமணப் பதிவேடுகளை வைத்து முறையாகச் செயல்பட்டு வருகின்றன. தகுதி வாய்ந்த நிர்வாகிகளால் நடத்தப்படும் சங்கங்கள் தரமான சேவைகளைச் செய்யக் காத்திருக்கின்றன.
இந்த அடிப்படையில் செயல்படத் தொடங்கி, நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பல பிரச்சினைகளைச் சுமுகமாகவும் அமைதியாகவும் தீர்த்து வைத்துள்ளது. எனவே, சங்கத்தை வலுப்படுத்துவோம்! சமாதானத்தை நிலைநாட்டுவோம்!
Saturday, November 13, 2010
புதிய விண்ணப்பப் படிவங்கள்
புதிய நிர்வாகம் என்றால், புதிய திட்டங்கள் வேண்டும் அல்லவா?
அறிஞர் பெருமக்களாலும் ஆர்வலர்களாலும் முறையாகத் தெரிவு செய்யப்பட எமது புதிய நிர்வாகம், சில விண்ணப்பப் படிவங்களைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அவை வருமாறு:
திருமணப் பதிவு விண்ணப்பம்.
இது, புதிதாகத் திருமண நிகழ்ச்சியை நடத்த விழையும் இரு வீட்டாரும் நிரப்பிக் கொடுக்க வேண்டிய விண்ணப்பப் படிவமாகும்.
இதில், குடும்பத் தலைவர், மணமகன், மணமகள், 'வலீ' ஆகியோரின் பெயர்களும், 'மஹர்' விவரமும், இரு வீட்டாரும் மனமொப்பிய நிலையில் வழங்கப்படும் அன்பளிப்புகள் (இருந்தால் அவையும்), திருமணத் தேதி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
திருமணச் சான்றிதழ் விண்ணப்பம்.
சங்கத்தின் மூலம் தமக்குத் திருமணம் நடைபெற்றதற்கான சான்று வேண்டுவோர் விண்ணப்பிக்கும் படிவம் இது.
இதில், விண்ணப்பதாரர் பெயர், யாருக்குச் சான்று, சங்கத்தின் அங்கத்தினர் எண், இணைப்பு ஆவணங்கள், சான்றுக் கட்டணம் (ரூ. முன்னூறு) ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
வழக்குப் பதிவுப் படிவம்:
திருமணம் மற்றும் இதர வழக்குகளுக்காகச் சங்கத்தின் மூலம் தீர்வை விழைவோர் நிரப்பிக் கொடுக்கும் விண்ணப்பப் படிவம் இது.
இதில், விண்ணப்பதாரரின் பெயர், வழக்குக்கு உட்பட்டோர் விவரம், வழக்கின் சாராம்சம், அது தொடர்பான ஆவணங்கள், சங்கப் பதிவெண், சான்றுக் கட்டணம் (ரூ. இருநூற்றைம்பது) ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

Thursday, November 11, 2010
சங்கத்தின் அங்கத்தில்....!
சகோதரர்களின் பயன்பாட்டிறகாகக் கீழ்க்கண்ட பட்டியலைத் தருகின்றோம்: சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள முஹல்லாக்கள்:
நடுத்தெரு (மேல்புறம் – கீழ்புறம்)
வாய்க்கால் தெரு (மேட்டுத்தெரு உள்பட)
புதுமனைத் தெரு (செக்கடித் தெரு உள்பட)
ஆலடித் தெரு (காயிதே மில்லத் நகர்)
தட்டாரத் தெரு / செட்டித்தெரு / தச்சத் தெரு
ஆஸ்பத்திரி (ஷாதுலியா) தெரு
புதுத்தெரு (வடபுறம்)
கிட்டங்கித் தெரு / மக்தூம் பள்ளித் தெரு / வண்டிப் பேட்டை
பழஞ்செட்டித் தெரு / ஏ. ஜே. நகர்
பிள்ளைமார் தெரு / சால்ட் லைன்
சுரைக்கா கொல்லை / சங்கத்துக் கொல்லை
சி. எம். பி. லைன் (அம்பேத்கர் நகர்) / இஜாபா பள்ளித் தெரு
எஸ். ஏ. எம். நகர்
பிலால் நகர்
( இனி வரும் காலத்தில், மேற்கண்ட பகுதிகளை ஒட்டி உருவாகும் குடியிருப்புப் பகுதிகளும் இப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படும், இன்ஷா அல்லாஹ்.)
சங்க இணைப்பில் உள்ள பள்ளிவாசல்கள்:
செக்கடிப் பள்ளி
முஹைதீன் ஜுமுஆப் பள்ளி
மரைக்கா பள்ளி
தக்வாப் பள்ளி
சித்தீக் பள்ளி
ஹனீப் பள்ளி
மர்யம் பள்ளி
இஜாபா பள்ளி
பிலால் பள்ளி
ரஹ்மானியா பள்ளி
புதுப்பள்ளி
மக்தூம் பள்ளி
ஏ. ஜே. பள்ளி
வண்டிப்பேட்டைப் பள்ளி
உமர் பள்ளி
( இனி வரும் காலத்தில் இப்பகுதிகளை ஒட்டிக் கட்டப்பெறும் பள்ளிவாயில்களும் இப்பட்டியலில் இடம்பெறும், இன்ஷா அலாஹ்.)

Wednesday, November 10, 2010
முன்னேற்றப் பாதையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்

அஸ்ஸலாமு-அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்! முறையான புத்தாக்கம் (Revamp) செய்யப்பெற்ற பின்னர், நாள் தோறும் அசர் தொழுகைக்குப்பின் செக்கடிப் பள்ளியில் கூடி, ஓர் அலுவலகம் போல் செயல்பட்டு வரும் புதிய நிர்வாகத்தின் முனைப்பான முயற்சியால், அதிரைச் சமூகப் பிரச்சினைகளும் மார்க்கப் பிரச்சினைகளும் முறையாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.
இதனைத்தான் சங்கத்தின் மூலம் அதிரைச் சகோதரர்கள் எதிர்பார்த்தனர். இந்த வகையில், நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டு வருவதை நாம் கண்டு வருகின்றோம். 'சங்கமா? பங்கமா?' என்றெல்லாம் கடந்த காலத்தில் சகோதரர்கள் எதிர்க் கணை தொடுக்கும் அளவுக்கு, மோசமான நிலை ஏற்பட்டிருந்தது உண்மைதான். உள்ளூர் ஆலிம்களின் வழிகாட்டலில், பொருத்தமான நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து, இப்போது திறம்பட நடந்து வருகின்றது நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்.
1920 முதல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவரும் அரசுப் பதிவு பெற்ற ( TNSR No. 35/2004 ) நமது சங்கம், பல வெற்றிச் சாதனைகளைப் புரிய ஆயத்தமாயுள்ளது. இந்த நோக்கத்தில், முதலாவதாகச் சங்கத்திற்கு என்று புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. துவக்க நிலையில் உள்ள இதன் நிழற்படங்களைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
அன்பர்களே! புதிய நிர்வாகம் திறம்படச் செயல்படுவதற்கு, உங்கள் அனைவரின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் தேவை. சமுதாயப் பணியில் எங்களுடன் கை கோர்த்து வாருங்கள்! அல்லாஹ் துணை நிற்பான். வஸ்ஸலாம்.

Tuesday, November 9, 2010
புரிந்துணர்வுக்கு நன்றி!
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வலைத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, திடீரென்று சங்கப் பெயரிலேயே ஒரு வலைத் தளம் யாராலோ உருவாக்கப்பட்டுச் சில நாட்கள் வலம் வந்ததை நாம் அறிந்து வியந்தோம். சங்கத்தால் அனுமதி அளிக்கப்படாத அந்தத் தளத்தை நாம் விரும்பவில்லை. என்றாலும், அதில் முனைந்த அன்பர்களை முறையாகத் தொடர்பு கொண்டு, அதை நிறுத்தும்படிக் கோரினோம். அவர்கள் சில நாட்கள் தயக்கத்தின் பின், அதற்குச் சம்மதித்தார்கள்.
முறையான மூடுவிழாவுக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட சுணக்கத்தை நாமும் பொருத்துக்கொண்டோம். அல்ஹம்து லில்லாஹ்! கருத்து மோதல், ஒற்றுமையின்மை, வதந்தி பரப்புதல் இவையனைத்தும் கூடாது என்பதால்தான், அந்தச் சகோதரர்களை நாம் கட்டாயப் படுத்தினோம். அல்லாமல், அவர்களைத் தரம் தாழ்த்துவதோ, அவர்களிடம் குறை காண்பதோ எமது நோக்கமன்று.
அந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றி, மற்றவர்களும் சங்கம் பற்றித் தங்கள் கருத்துகளை இப்பதிவில் வைக்கலாம். மாற்றுக் கருத்துகளாக இருப்பினும், அவை constructive criticisms ஆக இருந்தால், நிச்சயமாக நாம் அவற்றைப் பரிசீலிப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
சங்கத்துக்கு வந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகத் தூசி தட்டி எடுத்துத் தீர்வு காண வேண்டியதிருக்கிறது. இதற்கிடையில், புதிய பிரச்சினைகளும் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, அவசரம் அவசியம் கருதித்தான் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமன்றி, ஷரீஅத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை நமதூர் ஆலிம்களிடம் ஒப்படைத்து, குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் அவர்கள் தீர்ப்பளிப்பார்கள். அதனாலும் சுணக்கம் ஏற்படலாம்.
இவை போன்ற காரணங்களைப் புரிந்துணர்வோடு ஏற்று, நமதூர்ச் சகோதரர்கள் தங்கள் ஒத்துழைப்பைத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Labels:
புரிந்துணர்வு
Monday, November 8, 2010
போலி திருமணச் சான்றிதழ் : சங்கச் செயலாளரின் கண்டன அறிக்கை!
குவைத்வாழ் அதிரைச் சகோதரர்கள் சில நாட்களுக்கு முன் எமது பார்வைக்குச் சில ஆவனங்களை மின்மடல் மூலம் அனுப்பித் தந்திருந்தார்கள். அவற்றை நிதானமாகப் பரிசோதனை செய்த பின்னர், எமது சங்கத்திலிருந்து கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் திருமணச் சான்றிதழ் பொய்யானதும் போலியானதுமாகும் என்பது நிரூபணமாயிற்று. அந்தப் போலிச் சான்றிதழின் அடிப்படையிலேயே 'நோட்டரி பப்லிக்' அத்தாட்சியும், தமிழ்நாடு அரசுக் காஜியின் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது!
இந்த மோசடியான, போலிச் சான்றிதழ் வேலையில் ஈடுபட்ட, எங்கள் ஊரைச் சாராத அந்த மணமக்கள் மீது நாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எங்கள் வக்கீலிடம் புகார் செய்துள்ளோம். அவர் இதற்கான பூர்வாங்கப் பணிகளில் முனைந்துள்ளார். அவ்வாறு சம்மந்தப்பட்டவர்கள் மீது எதிர் நடவடிக்கை எடுத்து, அதனால் அந்தத் தம்பதியர் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நாங்கள் பொறுப்பாளர்களாக மாட்டோம்.
இம்முயற்சி, இது போன்ற வரம்பு மீறல்களில் ஈடுபட முனையும் மற்றவர்களையும் தடுத்து நிறுத்தும் என்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
M.S.M. அபுல் ஹசன் (செல்: 00 91 9786421535)
பொதுச் செயலாளர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்.
Sunday, November 7, 2010
ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகாரப்பூர்வ இணைய தள துவக்கம்!
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்!
நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம். சங்கத்தின் நிகழ்வுகள்,திட்டங்கள்,தீர்மானங்கள்,அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் வெளியிடப்படும்.
சங்க நிர்வாகம் ஒளிவு மறைவற்ற முறையில் செயல்பட வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளது.அதன் நடவடிக்கைகளில் ஒன்றே இணைய தளம்.சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட முஹல்லாவாசிக்கு என்ன தகவல் கிடைத்ததோ அதே தகவல் உலகில் எந்த நிலத்தில் இருந்தாலும் மற்றோரு முஹல்லாவாசிக்குக் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறது.
எனவே, உலகம் முழுவதும் வாழும் முஹல்லாவாசிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Subscribe to:
Posts (Atom)
இறைக் கட்டளை
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)