Ads 468x150px

Labels

Thursday, November 1, 2012

சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த


அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 30-10-2012 (புதன் கிழமை) நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரக கிளையின் கோரிக்கையின்படி அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்க 

முஹல்லாவுக்கு உட்பட்ட இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்துவது,இணையம்/வலைப்பூக்களில் சங்கம் குறித்து பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் 

தவறான கருத்துருவாக்கம் ஏற்படாத வகையில் வலைத்தள பொறுப்பாளர்களைக் கோருவது ஆகிய விசயங்கள் குறித்து அதிரை சம்சுல் இஸ்லாம் 


தலைமையக நிர்வாகிகளுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஜனாப். உமர் காக்கா அவர்கள் தலைமையேற்க,துபாய் கிளை ... தலைவர் ஜனாப்.அஸ்லம் வரவேற்புரையுடன் 


கலந்துரையாடல் மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு தொடங்கியது. அதிரையின் ஏனைய சங்கங்களைப்போன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் 

இளைஞர் அணி அமைப்பதற்கு செயல்திட்டம் வகுப்பது என்ற பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை ஜும்ஆ பயான் 


மற்றும் முஹல்லாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும்,சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் மஸூரா அடிப்படையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையயியும் விமர்சிப்பதும், அதுகுறித்த தவறான 

பரப்புரை, கருத்துருவாக்கம் ஏற்படாத வகையில் பதிவுகள், பின்னூட்டம் வெளியிடக்கூடாது என்றும் முன்மொழியப்பட்டு அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் 

அதிரை நிருபர் வலைத்தள நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது


கலந்துரையாடலுக்கு அதிரை பேரூராட்சி சேர்மன் சகோ.அஸ்லம்,அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்குரைஞர் சகோ.அப்துல் முனாப்

சவூதி-ஜித்தா அய்டா அமைப்பின் தலைவர் சகோ.சம்சுதீன், அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் துபை கிளை தலைவர் சகோ. தமீம் மற்றும் 

சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட பிரமுகர்கள் அழைக்கப்பட்டு மேற்கண்ட விசயங்களுக்கு கருத்து கேட்கப்பட்டது

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
துபாய் கிளை

2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்........சம்சுல் இஸ்லாம் சங்கம் இது போன்ற புதிய அமைப்புகளை தனது கிளையாக தர முயற்சிப்பது நல்ல ஒரு முயற்சியே.

    ReplyDelete
  2. இந்த முயற்ச்சி அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்

    ReplyDelete

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)