Ads 468x150px

Labels

Tuesday, August 22, 2017

சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுகுழு கூட்டம் அறிவிப்பு..!





சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் தேதி மற்றும் பொதுக்குழு கூட்டம் பற்றி செய்தி வெளியிடப்பட்டட்டுள்ளது.இதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தற்போதைய மூன்றாண்டு பதவிக்காலம் வருகிற 15/08/2017 அன்றுடன் முடிவடைகிறது.இதையடுத்து , கீழ்க்கண்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க சங்கத்தின் பொது குழு கூட்டம் வருகிற 05/09/2017 அன்று மாலை 4:30மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த பொதுக்குழு கூட்டத்தில்  முஹல்லாகளில் உள்ள சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்கம் படி அன்போடு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

1.தலைவர்
2.துணைத்தலைவர்
3.செயலாளர்
4.துணை செயலாளர்
5.பொருளாளர்

மேற்கண்ட பதவிகளுக்கு போட்டிட விருப்பம் உள்ள சங்க சங்க முஹல்லாவாசிகள்  தங்களது விருப்ப மனுவை  03/09/2017 தேதிக்குள் சங்கத்தில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

Thank 
Adiraixpress

Tuesday, August 15, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இந்திய சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் ஹாஜி அபுல் ஹசன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கச் செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்  ஆகியோர் சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத் தலைவர் அகமது அனஸ் வரவேற்றார். விழா முடிவில் எம்.எப் முஹம்மது சலீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 


Thank 
Adirainews 

Sent from my iPhone

Monday, August 14, 2017

முதல் முறையாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தேசிய கொடியேற்றம்




நமது திருநாட்டின் 71வது சுதந்திர தின விழா ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட் 15 தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தேசிய கொடியேற்றி கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அணைத்து முஹல்லாவாசிகளையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சங்க இளைஞர் அமைப்பு அன்புடன் அழைக்கிறது.

Friday, June 23, 2017

Fwd: சம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி



அதிராம்பட்டினம், ஜூன் 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை சங்க அலுவலக வளாகம் மற்றும் செக்கடிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

எம்.எஸ் ஷஹல் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் துணைத் தலைவர் எம்.எஸ் சிஹாபுதீன் தலைமை வகித்தார். சம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் தனது சிறப்புரையில், சங்கத்தின் கடந்த கால வரலாறு, ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் ரமலான் சிறப்புகள் குறித்து பேசினார். 'சிஷ்வா' குறித்து அறிமுக உரையை அவ்வமைப்பின் துபாய் பொறுப்பாளர் ஜமாலுதீன் நிகழ்த்தினார்.

தொடக்கத்தில், சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க செயலர் எம்.எஃப் முஹம்மது சலீம் ஆண்டரிக்கை வாசித்தார். இதில் சங்கம் கடந்த ஓராண்டில் ஆற்றிய சேவை, செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டார். முடிவில் மவ்லவி ஹாபிழ் ஏ.எல் ஹாரூன் சிறப்பு துஆ ஓதினார்.

இந்நிகழ்ச்சியில், சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரையும் சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

Thank you

Adirai News

Sent from my iPhone

Tuesday, June 20, 2017

சங்க மஹல்லாவாசிகள் இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கண்ணியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் அனைவருக்கும் வருகின்ற 23/6/2017 வெள்ளிக்கிழமை 27வது நோன்பு அன்று ஷ.இ.சங்கம் சார்பாக, சங்க வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
துவக்க நேரம் மாலை. 5 மணி
நிகழ்வுகள்;

1. உறுப்பினர்கள் சேர்க்கை
2. சங்க செயலாளர் விளக்க உரை
3. சிஸ்யாவின் ஆண்டரிக்கை வாசிப்பு
4. சிஸ்வா அறிமுகம் மற்றும் உறுதி மொழி உரை.
5. இஃப்தார் நிகழ்வு




இங்கனம்

ஷம்சுல் இஸ்லாம் சங்கம்(SIS)
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA)

ஷம்சுல் இஸ்லாம் சங்க வெல்பேர் அசோசியேசன்(SHISWA)

Sunday, September 13, 2015

அதிராம்பட்டினம் மரணஅறிவிப்பு

துபாய் நூர் இல்லம் ஸ்டேசனரி மேலாண்மை இயக்குநர் நமதூர்
அல்ஹாஜ் ஷேக் தாவூத் ( வயது 65 )
அவர்கள் இன்று 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இறைவனிடி சேர்ந்தார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா நாளை 14.09.2015 திங்கட்கிழமை துபாயில்  மஃக்ரிப்புக்க பிறகு அல்குஸ் சேக் ஜாயித் ரோடு ஓயசிஸ் பின்புறம் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா வாசிகள் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும்.
தொடர்புக்கு : இஸ்லாமுதீன் : 050 20 49 217

Wednesday, August 19, 2015

சம்சுல் இஸ்லாம் சங்கம் செயலாளராக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் போட்டியின்றி தேர்வு !


சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று [ 19-08-2015 ] காலை சங்க அலுவகலத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். சங்க துணை செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது, பொருளாளர் ஆடிட்டர் ஹாஜி அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் சங்க நிர்வாகத்தில் காலியாக உள்ள செயலாளர் பொறுப்புக்கு புதிய நிர்வாகி தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் மஹல்லாவாசியும், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வருமாகிய பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள், சங்கத்தின் செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தாம் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கல்லுக்கொல்லை)
 

நன்றி

Friday, July 24, 2015

அமீரகத்தில் ஓதப்படும் ஜும்மா உரை 24-07-15

கலவர சிந்தனையும் காழ்புணர்ச்சியும்!

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏறத்தாழ அமீரகத்தில் AWQAF கட்டுப்பாட்டில் உள்ள 5000 பள்ளிவாசல்களில் நடத்தப்படும் ஜும் ஆ உரையின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது..தொழுகைக்கு செல்லும் முன் படித்து விட்டுச் சென்றால் இமாம் பேசுவதை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
இதனுடைய மொழிபெயர்ப்பை சில நாட்களுக்கு பின்  Awqaf வெப்சைட்டில் வெளியாகும் ஆங்கில பதிப்போடு சரிபார்த்துக் கொள்ளவும்.
.

எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:39)

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை  அஞ்சுங்கள்! அல்லாஹ் வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

ஜஸாக்கல்லாஹூ கைர்..













Wednesday, June 17, 2015

இந்தியாவில் தடை செய்யப்பட்ட 400 தயாரிப்புகள்..பெரும்பாலானவை விற்பனையில்..பகீர் ரிப்போர்ட்.

டெல்லி: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் மேகி மட்டும் தடை செய்யப்பட்டவில்லை. பிரபல பெரும் நிறுவனங்களின் தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.























இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)