Ads 468x150px

Labels

Monday, December 4, 2017

துபையில் (SHISWA) பரிசுகள் வழங்கப்பட்ட 10 அதிஷ்டசாலிகள்.





டிசம்பர் - 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களைக் குலுக்கிப் போட்டு 10 அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயங்களும் சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை அன்பளிப்பு (Sponsorship) செய்தவர்களின் விபரம் வருமாறு:

*1) முதல் பரிசு :* ஒரு பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: A.K.பெரோஜுதீன்* (டோக்கன் # 234)*


பரிசளித்தவர்: அதிரை 90.4 FM சார்பாக *சகோ.A.L.முஹைதீன்*


*2) இரண்டாவது பரிசு:* முக்கால் பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: அப்துல் ரஜாக் (டோக்கன் #30)*

பரிசளித்தவர்: Brite-Med Clinic -Diera - Dubai . *டாக்டர். முஹம்மது ஆரிஃப்*


*3) மூன்றாவது பரிசு:* அரை பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: அஹமதா ஜமாலுதீன் (டோக்கன் # 202)*


பரிசளித்தவர் : *சகோ.M.I.சலீம் - துபாய்*


*4) நான்காவது பரிசு:* அரை பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: M.J.அஸ்லம் (டோக்கன் # 203)*


பரிசளித்தவர்: *சகோ.நாசர் - (Majlis) துபாய்*


*5) ஐந்தாவது பரிசு:* கால்பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: M.S தீனுல் ஹக் (டோக்கன் # 138)*


பரிசளித்தவர்: *சகோ. முஹம்மது ஹுசைன் ஆலிம் (Abdullah Hussain Typing Center- Dubai)*


*6) ஆறாவது பரிசு:* கால் பவுன் தங்க நாணயம்


*வென்றவர்: சமீம் அஹமது (டோக்கன் # 121)*


பரிசளித்தவர்: *சகோ. முஹம்மது சாலிஹ் - Threeyem Printings - Dubai*


*7) ஏழாவது பரிசு:* கால் பவுன் தங்க நாணயம் 


*வென்றவர்: ஷேக் தம்பி (டோக்கன் # 095)*
 
பரிசளித்தவர்: S.M.S. அஸ்ரப் அலி (U.S.A)

*8) எட்டாவது பரிசு:* கால் பவுன் தங்க நாணயம் 
(Missed Call Competition)

*வென்றவர்: H.ஹனான் ஹில்மியா*
பரிசளித்தவர்: மீராஷாகிப் (ஆஸ்திரேலியா)

*9) விளையாட்டுப் போட்டி பம்பர் பரிசு:* கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர்: *ஸைனா இப்ராஹிம்*

பரிசளித்தவர்: *M.K.இலியாஸ் - அபுதாபி*


*10) மார்க்க கேள்வி-பதில் பரிசு:* கால் பவுன் தங்க நாணயம்


*வென்றவர் : அஹமது தாஸின்*


பரிசளித்தவர்: *F.இப்ராஹிம் ஃபாருக்*


மேற்கண்ட பரிசுகள் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளுக்கு இரண்டு முதல் பரிசுகளை வழங்கியவர் *சகோ.அபுல் கலாம் - பஹ்ரைன்*

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முஹம்மது ஹுசைன் டைப்பிங் சென்டர் சார்பாக டின்னர் செட் ஒன்று வழங்கப்பட்டது. அதை வென்ற *சகோ.N.M.அஹமது சலீம் (டோக்கன் # 79)* மீண்டும் குலுக்கல் பரிசாக அதை வழங்கினார். *வென்றவர்: நஜுமுதீன் (டோக்கன் # 55).*

விளையாட்டுப் போட்டிகளில் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறப்பு பரிசை *சகோ.A.H. நூருல் ஹக்* வழங்கினார்.

Al Raya Mobile Service சார்பாக விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.


இவைகளுடன் நிகழ்ச்சிக்கான அமீரக தேசியக்கொடிகள், தோரணங்கள் மற்றும் சால்வைகளை சகோ.ஜியாவுதீன் -SUPER SONIC FASHION  அன்பளிப்பாக வழங்கினார்.

குழந்தைகளுக்கான பொம்மைகளை (Toys) *சகோ.A.M.தாஜுதீன்*  பணியாற்றும் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

Sunday, December 3, 2017

துபையில் (SHISWA) ஒன்றுகூடல் சிறப்பு போட்டிகளில் பரிசு பெற்றோர் விவரங்கள் (படங்கள்) UPDATE

பரிசு வென்றோர் விவரங்கள்:
முதுகுப் பந்து ஓட்டம்:
சல்மான் இஸ்மாயில் & ஹாருன் இஸ்மாயில்
சுஹைல் & அப்துல் கரீம்

சாக்கு ஓட்டம்:
முகைதீன் ஆஷிக்
உதுமான் சித்தீக்
சுஹைல் அபுதாலிப்

கூடைப்பந்து ( ஆண்கள்)
ராஜிக்
அகமது இப்ராஹீம்
முகமது இப்ராஹீம்

50 மீட்டர் ஓட்டம்
எப். சலீம்

லெமன் & ஸ்பூன் ( சிறுமிகள்)
மெஹ்னாஸ்
நவ்ராஹ்

சாக்லெட் கலெக்சன்:
ஷாக்கீர் பாசித்
அஜ்கா அப்துல் ரெஜாக்

பிஸ்கட் கவ்வுதல்:
ஷைனா இப்ராஹீம்
ஹாரூன் இஸ்மாயில்

கூடைபந்து (பெண்கள்)
ஆரிஃபா ஆஷிக்
சாதிக்கா மொய்னூதீன்

ஊசி நூல்கோர்த்தல்:
ரமீஜா முகமது
முஹ்ஸினா மீரா சாஹிப்

மிஸ்டு கால்:
எச். ஹநான் ஹில்மியா

ஆப்பிள் தோலுரித்தல்:
கர்மிலா யூசுப்
ஃபைரோஸா நெய்னா

50 மீட்டர் ஓட்டப்பந்தயம் ( நாற்பது வயதுக்கு மேற்பட்டோர்)
அப்துல் ஹமீது

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை குலுக்கிப்போட்டு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை, கால் பவுன் தங்கக் காசுகள் எட்டுபேருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நூறுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் குர்ஆன் கிராஅத்துடன் தொடங்கி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றன.







































send by iPhone


*துபாயில் நடந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) மூன்றாம் ஆண்டு ஒன்றுகூடல்*

ஐக்கிய அரபு அமீரகம் 46 ஆவது தேசியதின விடுமுறை நாட்களில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் (Get together) நிகழ்வு டிசம்பர்-2, 2017 (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பினருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. (போட்டிகள் மற்றும் பரிசு வென்றோர் விபரம் தனிசெய்தியில் காண்க)

மதியம் தமிழக சுவையுடன் தரமான உணவும், மாலை தேநீரும் வழங்கப்பட்டன. உள்நாடு மற்றும் பிற நாடுகளிலிருந்தும் ஊர் பிரமுகர்கள் கலந்து அமெரிக்கா. ஆஸ்திரேலியா, பஹ்ரைன் மற்றும் இந்தியாவிலிருந்தும் சிறப்பு பரிசுகள் ஸ்பான்சர் செய்யப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டோருக்குப் போட்டிகள் மூலமும் குலுக்கல் மூலமும் வழங்கப்பட்டன. (பரிசுகள் வழங்கியோர் மற்றும் வென்றோர் விபரம் தனி செய்தியில் காண்க).

அமீரகம் வாழ் மூத்த மஹல்லாவாசிகள் மற்றும் அமீரக, இந்திய தொழிலதிபர்கள், தொழில் முனைவோரும் மஹல்லாவாசிகளை வைத்து போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை குலுக்கிப்போட்டு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை, கால் பவுன் தங்கக் காசுகள் எட்டுபேருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கபட்டன.

நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நூறுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் குர்ஆன் கிராஅத்துடன் தொடங்கி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றன.


Sent from my iPhone

Friday, December 1, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குழந்தைகளுக்கான ஆதார் முகாம்!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை 02-12-2017 காலை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுக்க சங்க வளாகத்தில் ஏற்ப்பாடு செய்துள்ளனர்.

வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளவும்.


Sent from my iPhone

Thursday, November 30, 2017

அதிரை பேரூராட்சியில் 2 அம்ச கோரிக்கை மனுக்களை வழங்கிய சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர்!

கோரிக்கை 1:

அதிரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் 10 லட்சம் லிட்டர் மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகளின் முக்கிய நீர் ஆதாரமாக காட்டுக்குளம், ஆலடிக்குளம், செக்கடிக்குளம் ஆகியவை இருந்து வருகின்றன. இந்த நிலையில்  கடந்த சில ஆண்டுகளாக இந்த குளங்கள் முழுமையாக நிரம்பாததன் காரணமாக போர்வெல்லில் நீர்மட்டம் குறைந்துள்ளதுடன் நிலத்தடி நீரும் தொடர்ந்து கீழ் சென்று வருகின்றது. இதையடுத்து காசரா ஏரியில் உள்ள நீரேற்று பம்பிங் லைன் மூலம் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை நிர்வாக அதிகாரியிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் கோரிக்கை மனுவை வழங்கினர். 

கோரிக்கை 2:

அதே போன்று இமாம் ஷாபி பள்ளி மற்றும் இஜாபா பள்ளி அருகாமையில் உள்ள மழை நீர் வடிகாலில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் சேர்வதால் அந்த பகுதிகள் துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த மழை நீர் வடிகாலை பேரூராட்சி சுத்தம் செய்து தர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு வழங்கி கோரிக்கை விடுத்தனர். இந்த மனுக்களை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ் உள்ளிட்ட சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.


Sent from my iPhone

Wednesday, November 29, 2017

அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க ஒன்று கூடல் (Get together) பரிசுகள் விபரம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை, டிசம்பர்-2, 2017 ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை சார்பில் துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் (Mushrif Park) நடைபெற இருக்கும் ஒன்று கூடல் (Get together) நிகழ்வில் அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற இருப்பதை அறிவித்திருந்தோம். அவற்றில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கக்காசு (Gold Coins) பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபட உள்ளன.

அவற்றின் விபரம் வருமாறு:

முதல் பரிசு: Gold Coin, ஒரு பவுன் (ஒருவருக்கு)

இரண்டாம் பரிசு - Gold Coin, முக்கால் பவுன் (ஒருவருக்கு)

மூன்றாம் பரிசு - Gold Coin, அரை பவுன் (ஒருவருக்கு).

ஆறுதல் பரிசு - Gold Coin, கால் பவுன் (ஒருவருக்கு)

இவைகள் தவிர நவம்பர் 30 மற்றும் டிசம்பர்-1 துபாய் அல் மனார் செண்டரில் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடை சொல்லும் ஒருவருக்கு கால் பவுன் தங்கக்காசு(Gold Coin) சிறப்புப் பரிசாக வழங்கப்படும்.

ஆகவே, சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவாசிகள் காலம் தாழ்த்தாமல் காலை 9-மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் முஷ்ரிஃப் பூங்காவிற்க்கு (Mushrif Park) வருகை தந்து நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

1) வாகன வசதி இல்லாத நமது சங்க மஹல்லா பேச்சிலர்களுக்கு (Bachelors) மட்டும் துபாய் தேரா-வெஸ்ட் ஹோட்டல் அருகிலிருந்து வாகன வசதி செய்யத் திட்டமி்ட்டுள்ளதால் நாளைக்குள் (30-11-2017 வியாழன் இரவு 8:00 மணிக்குள்) முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என்பதால் கிளை நிர்வாகிகளிடம் அதை உறுதி செய்துகொள்ளவும்.

2) அமீரகத்தில் விசிட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், நமது ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக வெளிநாடு மற்றும் தாயகத்திலிருந்து வந்திருப்பவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவையுள்ளோர் துபாய் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

இவண்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) அமீரக கிளை
Sent from my iPhone

Tuesday, November 28, 2017

துபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கான அறிவிப்பு !


ஐக்கிய அரபு அமீரகம்  தேசியதின விடுமுறை அன்று (டிசம்பர்-2,2017 - சனிக்கிழமை)  துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாவாசிகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

அதுகுறித்த விபரம் வருமாறு:

சிறார்/சிறுமி பிரிவு
1) முதுகில் பந்து சுமந்து ஓடுதல் (Back Ball Race)
2) சாக்கு ஓட்டம் (Sack race)
3) லெமன் & ஸ்பூன் (Lemon in Spoon Race)

குழந்தைகள் பிரிவு
4) சாக்லேட் சேமிப்பு (Chocolate Collection)
5) பிஸ்கட் கவ்வுதல் (Biscuit Bite)
6) சிப்ஸ் சாப்பிடுதல் (Cheese Ball Eating)

பெண்கள் பிரிவு
7) நூல் கோர்த்தல் (Needle & Thread)
8) ஆப்பில் தோலுரித்தல் (Apple Peeling)
9) கூடையில் பந்து வீசுதல் (Basket & Ball)

ஆண்கள் பிரிவு
10) கூடையில் பந்து வீசுதல் (Basket &  Ball)
11) 100 மீட்டர் ஓட்டம் (Running Race)

அனைத்து தரப்பினர்
12) மிஸ்டு கால் (Missed Call)

போட்டி விதிமுறைகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

காலை 9:00 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் பூங்கா வளாகத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் முன்பதிவு (Registration) செய்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இவண்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) துபாய் கிளை

Sent from my iPhone

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)